| மேலிருந்து செலுத்தி ஒளியெறிக்கின்ற பஞ்சதருக்களாகிய சோலையை யுடைய அழகிய வானுலகத்திற்கு அரசுத் தன்மையை எய்துவர். (வி - ம்.) அல்ல - நன்மையல்லாதன; அஃதாவது, தீவினைகள். இரித்தல் - ஒட்டல்; கெடுத்தல். இரியென - கெடுத்தருள்க என்று. அரற்றின் - அழுதால். அத்திருத்தணிகை மலையை நோக்கி ஒருகால் தீமையைக் கடிந்தருள்க வென்று கூறி அழுதால் என்றபடி. நல்ல - நன்மைகள். காத்து - தந்து. அமர் - போர். நல்ல, அல்ல என்பன குறிப்பு வினையாலணையும் பெயர்கள் ; பன்மை. காத்திரம் - யானையின் முன்கால்கள். உம்மை இறந்தது தழீஇய எச்சம்; அன்றி எதிரது தழீஇயதுமாம். அதற்குத் தன் கொம்புகளாலும் என்று வருவித்துரைக. சவட்டு - கொல்லுகின்ற; அழிக்கின்ற. இஃதிப் பொருட்டாதலை, 1 "மூதூர், தன்னையுஞ் சவட்டிப் போதிச் சாமியைச் சார்தும் என்றான்" என்புழிக் காண்க. எல்ல - ஒளியையுடைய ; எல் இப்பொருள் தருதலை, 2 "எல்லே இலக்கம்" என்னும் தொல்காப்பிய நூற்பாவாலறிக. திருப்பதி, அடைமொழிகளால் ஈண்டு வானுலகைக் குறித்தது. இறைமை - தலைமை; அரசு. (45) | | பிறப்பவ ரருள்பிறப் பெல்லை யாகுவர் | | | சிறப்பவத் தணிகையந் தேத்து வாழுநர் | | | மறப்பருங் கந்தலோ கத்து வாழ்குவர் | | | இறப்பவர் மலமிறந் திறப்பர் முத்தியின். |
(இ - ள்.) இத்தணிகைக்கண் பிறப்பவர் அருளுடைய பிறப்புக்கு எல்லையாக இருப்பர்; சிறப்புடன் அத்திருத்தணிகை யிடத்தே வாழ்வோர், என்றும் மறத்தற்கரிதாகிய கந்த உலகத்தின் கண்ணே வாழ்வார்கள்; அங்கு இறப்போர் தம் ஆணவம் மாயை காமியம் என்னும் மும்மலங்களும் அவிந்து வீட்டுலகத்துக்குச் செல்வோராவார். பிறப்பவர், இத்திருத்தணிகைக்கண் பிறந்தவர் என்னும் பொருளது. திருத்தணிகையென்பது அவாய் நிலையான் வந்தது. இங்குப் பிறப்பவர் இறைவன் திருவருள் பெற்று இன்புறுவர் ஆகலான், பிறவிகளில் அருட்பிறப்பு மருட்பிறப்பு என, இருவகைத்து. இறைவனாகிய குமாரப் பெருமான் திருவருளைப்பெறும் நல்வாய்ப்பைப் பெறுவர். அதற்கு எடுத்துக்காட்டிக் கூறற்கு இத்தலத்தில் பிறந்தாரே சான்றாக அமைவராகலின் அருள் பிறப்பெல்லை ஆகுவர்.' என்றார். தேம் - இடம். கந்தலோகம் - இன்பமிக்க கந்தப்பெருமான் வாழும் உலகம். இறப்பவர் - மாண்டுபோவோர். மலம், மேற்கூறப்பட்ட மும்மலங்கள். இறந்து - கெட்டு. இறப்பர் - செல்வர். அஃதிப்பொருட்டாதலை, "இறந்தார் இறந்தார் அனையர் (திருக். 31) என்புழிக் காண்க. (46) | | இருண்மல மிரித்தலி னிரவி யொக்குமால் | | | மருள்பிணி துமித்தலின் மருந்து போலுமால் | | | பொருள்பல விளைத்தலிற் புகழ்ச்சிந் தாமணி | | | தருநிதி தேனுவுந் தலமொப் பாகுமே. |
| 1. | சீவக, கனக : 178. | | 2. | தொல். சொல். இடையியல் : 21. |
|