| அறிவு, ஆயுள் எனும் மூன்றுக்கும் ஒட்டுக. பறைய - கெட, தேய என்னும் பொருளது. மும்மலம், முற்கூறிய ஆணவம் மாயை காமியம் என்பன. பாய - பரந்த, விரிந்த என்னும் பொருள்தரும் பெயரெச்சம். இஃதிப் பொருளில் 1 'பாய வாரியுண் டுயர்கெடுத் துலகெலாம் பருக' என்புழி வருதலால் தெளிக. ஆப - ஆவார். பகரவீற்றுப் பலரறிசொல். என்னை? | | 2"அர்ஆர் பஎன வரூஉ மூன்றும் | | | பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே" |
என்றலின். (51) | | கூவி ரத்தடந் தேர்மத குஞ்சரம் | | | வாவு கொய்யுளை மாசிவி கைக்குலம் | | | மேவி யுய்ப்பவ ரன்னவை மேல்கொடு | | | தாவி லாத்துறக் கந்தனைச் சார்வரால். |
(இ - ள்.) மேல் தட்டினையுடைய பெரிய தேரினும் பதம் பொருந்திய யானையின்மீதினும் தாவி யோடுகின்ற கொய்த புறமயிரினையுடைய குதிரையின் மீதினும் பெருமைபொருந்திய பல்லக்குக் கூட்டங்களினும் பொருந்தியிருந்து அவற்றைச் செலுத்துவோர் மறுமையில் அவ்வவ் வூர்திகளின் மேலேறியிருந்து குற்றமற்ற வானுலகத்தைச் சார்ந்து இன்புறுவர். (வி - ம்.) கூவிரம் - தேரினது மேல்தட்டு. குஞ்சரம் - யானை. வாவு - தாவியோடுகின்ற. கொய்உளை - களையப்பட்ட புறமயிர், பிடரி மயிர். உளை என்பது, குதிரையின் பிடரிமயிரினை உணர்த்தி, அதனை யுடைய குதிரைக்காய், அதன் முதுகுப் புறத்துக்காதலால் இருமடியாகுபெயர். சிவிகை - பல்லக்கு. குலம் - இனம், கூட்டம். பல்லக்கு பல்வகை வடிவிற் செய்யப்பட்டு ஊர்ந்து செல்வதாகலின், "குலம்ழு என்றார். மறுமையில் தேவருலகத்திருந்து இவைகள் வந்து தாங்கிச் செல்வதாகலின் "அன்னவை மேல்கொடு. . . . . .சார்வர்" என்றார். ஆல் : அசை. இத்தலத்தில் பல்வகை ஊர்தியில் ஊர்ந்து செல்வோர் தேவருலகத்தினும் அவ்வூர்தியினிவர்ந்து செல்வர் என்றமையால் இத்தலம், வாளா இறைவன்பாற் பத்தியில்லார்க்கும் அத்தலத்தில் இருப்போர்க்கும் துறக்க வின்பம் முதலியவற்றைத் தரும் பெருமைமிக்க தென்பதைத் தெளிவுறுத்தியபடியாம் என்க. (52) | | நீர்சொ ரிந்துநி லத்தைய ளிப்பவர் | | | சீர்சொ ரிந்தசெல் வத்தின்மி குந்துவாழ்ந் | | | தேர்சொ ரிந்தமெய் யெய்தியி ருவளம் | | | பார்சொ ரிந்திடப் பார்த்திப ராகுவார். |
(இ - ள்.) (தம்பால் வந்திரந்தார்க்குத் தமக்குரிய) விளைநிலத்தைத் தாரைவார்த்துக் கொடுப்போர், சிறப்பால் மேம்பட்ட செல்வத்தால் சிறந்து வாழ்ந்து அழகுமிக்க நல்லுடல்பெற்றுப் பெருத்த செல்வத்தை உலகம் தமக்கு மிகுதிபெறக் கொடுக்க மன்னராக விளங்குவர். | 1. | திருவிளை, பாயிரம் : | | 2. | தொல், சொல். வினையியல் : |
|