| (வி - ம்.) நீர் சொரிதல் - தாரைவார்த்துக் கொடுத்தல் தம்பால், இல்லென ஒன்றைக் கேட்டு இரந்த இரவலர்க்குப் பெரும் பொருளையோ நிலம்போன்ற கொடுக்க இயலாத நிலையியற் பொருளையோ அவர்க்கு வழங்குங்கால் கையில் நீர்கொண்டு அவர் கையில் வார்த்து உனக்கே இஃதுரிமையெனக் கூறிக் கொடுத்தல் பண்டு தொட்டு நம் நாட்டிடை இருந்துவரும் வழக்காகும். அத்தலத்து ஒருவர்க்கு வேண்டிய விளை நிலத்தைத் தாரைவார்த்துக் கொடுப்பவர், எல்லாச் செல்வமும் பெற்று உடலில் நோய் முதலிய துன்பங்களின்றியும் வாழ்வதோடு, உலகங் காவல்புரியும் மன்னராகவும் விளங்குவர். சொரிந்த என்னும் பெயரெச்சம் மிகுதிப் பொருளில் வந்தது. நிலம் - ஈண்டு விளைநிலம். தண்ணடையென வழங்குவர். இருவளம் - பெருஞ் செல்வம். பார் - உலகமக்கள். பார்த்திபர் - மன்னர்; அரசர். (53) | | அன்ன நல்கினு மாடையு தவினும் | | | பொன்ன ளிப்பினும் பூணணி வீசினும் | | | கொன்னும் வேறுத லத்திற்கொ டுப்பதின் | | | அன்ன வைப்பின ரும்பயன் கோடியே. |
(இ - ள்.) ஏழைமக்களுக்குச் சோறு வழங்கினாலும் ஆடைகள் ஈந்தாலும் பொருட்கொடை கொடுத்தாலும் அணிகின்ற அணிவகைகளை வழங்கினாலும் பயனில்லாத வேறு தலங்களிற் கொடுப்பதைக் காட்டினும் அத்திருத்தணிகைத் தலத்தில் கிட்டற்கரிய பயன் அவைகளிலும் காட்டில் கோடி மடங்கு ஆகும். (வி - ம்.) அன்ன - அத்தன்மைத்தான; பண்டறி சுட்டாய்த் தலத்தின் பெருமை யாவற்றையும் குறித்தது. கொன் - பயனின்மை. இப்பொருள்தருதலை, | | 1 "அச்சம் பயமிலி காலம் பெருமையென் | | | றப்பால் நான்கே கொன்னைச் சொல்லே" |
என்னும் நூற்பாவான் அறிக. வைப்பு - வைப்பிடம், தலம். கோடி - கோடி மடங்கு பெருமையுடையது. (54) | | ஆயு நான்மறை யந்தணர்க் கவ்வயின் | | | ஈயு நற்பயன் கோடியி லக்கமாம் | | | பாய தொல்புகழ்ப் பார்முதல் யாவையும் | | | காயி லைக்கதிர் வேலவற் கீயினே. |
(இ - ள்.) பரந்த பழமையான புகழையுடைய நிலமுதலாக எல்லாப் பொருள்களையும் வருத்துகின்ற இலைவடிவும் ஒளியும் பொருந்திய வேற்படையையுடைய முருகப்பெருமான் திருமுன் கொடுக்கப்படின், நான்கு மறைகளையும் ஆய்ந்தறிகின்ற அந்தணர்கட்கு அத்திருத் தணிகைக்கண் பொருள்களை ஈகின்ற நல்ல பயனானது ஒன்றுக்குக் கோடி இலட்சம் பங்கு மிகுதியாகப் பயன்தருவதாகும். | 1. | தொல். சொல். இடையியல் : 6. |
|