பக்கம் எண் :

418தணிகைப் புராணம்

(வி - ம்.) தொல்புகழ் - பழமையான புகழ். காய் - வருத்துகின்ற. இலை - இலையொத்த தகட்டு வடிவம். கதிர் - ஒளி. ஈயின் - கொடுத்தால்; செயினென்னும் வாய்பாட்டு வினையெச்சம். நான்மறை - நான்கு வகைப்பட்ட தமிழ்மறைகள். ஆயும் - கற்று ஆராய்ச்சி செய்கின்ற. அந்தணர் - அழகிய தண்ணளியுடைய பெரியோர். இவர்கட்கு அத்தலத்தில் ஒன்று கொடுப்பதைக் காட்டினும் முருகப்பெருமானின் திருமுன் கொடுப்பின் அவ்வொன்றுக்குரிய பயன், கோடி இலட்சம் பங்கு மிகுதிப்பட்டு ஒருவர்க்குப் பயன்தரும்; அவ்வளவு மேன்மை, முருகப்பெருமானது திருமுன்னென ஏற்றங் கூறியவாறு. பார் முதல் என்றமையால் அதனோடு தொடர்புடைய பொன்னையும் பொருள்களையும் கொள்க.

(55)

 அருப்பி ளம்பொழி லாக்குநர் நந்தனம்
 மருப்பொ லிந்தவ னங்கள்பு துக்குநர்
 திருப்பொ லிந்ததி ருத்தந் தொடுநரும்
 இருப்பர் கந்தவு லகத்தெஞ் ஞான்றுமே.

(இ - ள்.) மலரரும்புகளையுடைய, இளஞ்சோலையை உண்டாக்கி யோரும் நந்தவனங்களையும் மணம்நிறைந்த மரக்காடுகளையும் புதிதாக உண்டாக்கியோரும் அழகு பொலிகின்ற தீர்த்தத்தடாகங்களை வெட்டி உண்டாக்கியோரும், ஆகிய இவர்கள் கந்தருலகத்து எக்காலத்தும் வாழ்பவராவர்.

(வி - ம்.) அருப்பு - அரும்பு. இளம் பொழில் - இளமரங்களை யுடைய சோலை. வனம் - காடு; பல்வகை மரங்கள் நெருங்கிய காடு. தொடுநர் - தோண்டினவர், வெட்டி உண்டாக்கியோர். கந்த உலகம் - முருகப்பெருமானுக்குரிய உயர்ந்த இன்பவுலகம்.

(56)

 தூம மெங்குங்க மழத்தொ குக்குநர்
 காம ரும்பல தீபங்க ஞற்றுநர்
 தாம நாற்றுநர் தாமும றுமுகன்
 சேம வானுல கத்தன்றிச் செல்லுறார்.

(இ - ள்.) இத்திருத்தணிகைக்கண் நறும்புகை யெவ்விடத்தும் கமழும்படி கூட்டுகின்றோம், விரும்புகின்ற அரிய பல்வகை விளக்குகளை மிகுதியாக ஏற்றுவோரும், மாலைகளைத் தொங்கும்படி செய்வோரும் ஆகிய இத்தகைய அறம்பல செய்வோர் ஆறு திருமுகங்களையுடைய முருகப்பெருமானுக்குரிய பாதுகாப்பு வாய்ந்த கந்தவுலகத்தே சார்ந்திருக்கும் தன்மையராவர்.

(வி - ம்.) தூமம் - நறும்புகை. "நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி" என்பர் ஆசிரியர் நக்கீரனார். தொகுத்தல் - நிறைவித்தல். காமம் அரும் - காமரும் என நிலைமொழி கடைக்குறைந்து புணர்ந்தது. தீபம் - விளக்கு. இறைவன் திருக்கோயிலுக்கு நறும்புகை புகைத்தலும் விளக்குகள் பல ஏற்றுவித்தலும், மாலைகளை நாற்புறங்களிலும் கட்டித் தொங்கவிடுதலும் இறைவனுக்கு உவப்புறச் செய்யும் அருந்தொண்டுகளாகும். ஆகலான், அவர் ஆறுமுகக் கடவுளின்
திருவுலகத்தன்றி