| வேறுலகத்துக்குச் செல்லுறார் எனவே, கந்தருலகம் பிற எல்லா வுலகங்களினும் சிறந்த இன்பவுலகம் என்பதைச் சுட்டி உணர்த்தினார். இவற்றைத் தவறாது செய்யவேண்டுமென்பதைக் குறிப்பால் உணர்த்தினார். (57) | | கோயில் கோபுரங் கூடம்பன் மண்டபம் | | | வாயின் மாமதின் மற்றுமி ழைக்குநர் | | | தீய தீர்ந்துவிண் செல்வமெ லாந்தழீஇ | | | ஆய பின்னிளை யோனுல கண்முவார். |
(இ - ள்.) திருக்கோவிலும், திருக்கோவிலின் முகப்புவாயிலும், தேவகோட்ட மன்றமும், வாசல்களும், பெரிய கோட்டைகளும், ஏனைய பலவற்றையும், செய்வோர், தம்முடைய பழவினைகள் நீங்கப்பெற்று, வானுலகத்து இன்பங்கள் யாவும் பெற்று, அவை முடிந்தபின்பு, இளையோனான முருகப்பெருமானது, கந்தருலகத்தின் இன்பத்தைப் பெறுவர். (வி - ம்.) வாயில் - கோயிலின் வாசல்கள். மற்றும் என்றமையால் தேர், முருகப்பெருமான் ஊர்தியாகிய மயில்கள் யானை ஆட்டுக் கடா முதலிய உருவங்கள் மரத்தானும் செம்பு வெள்ளி பொன் போன்ற உலோகங்களானும் செய்வித்தல். தீய - தீமை தருவனவாகிய பழவினைகள் : ஆகுபெயர். விண் செல்வம் - இந்திரன் முதலிய இறையவர் பதங்கள். தழீஇ - தழுவி; பெற்று : சொல்லிசை யளபெடை. இளையோன் - மணங்கமழ் தெய்வத்தின் நலம்வாய்ந்த முருகவேள். உலகு - உலகம்; அஃதாவது கந்தருலகம். (58) | | புதுவ தாக்கும்பு கரில்ப யத்தினும் | | | கதுவுந் தூர்ந்தகண் ணார்தடந் தீர்த்தமும் | | | செதுவ தானதி ருப்பணி யாவையும் | | | முதுவ தோர்ந்துமு றையினி யற்றினே. |
(இ - ள்.) புதியதாக உண்டாக்குகின்ற குற்றமற்ற நீர்த்தடாகத்தினும் அழிகின்றதாய்த் தூர்ந்து மேடாகிப்போன இடம் மிக்க விரிந்த தீர்த்தத் தடாகமும் சிதைந்து போனதான திருக்கோயில்கள் யாவற்றையும் முதன்மைய தென்பதை அறிந்து முறையாக அவைகளைச் சீர்த்திருத்தி மேலும். (வி - ம்.) பயம் - நீர். அதனையுடைய தடாகத்துக்கு ஆகுபெயர். கதுவுதல் - அழிதல்; கதுவும் - அழிகின்ற : பெயரெச்சம். தூர்ந்த - பள்ளமாக இருந்து மேடாகிப் போன. தீர்த்தம் - தடாகம் : ஆகுபெயர். செதுவது - சிதைந்தது; இடிந்தது. திருப்பணி - திருக்கோயில். மற்ற தொண்டுகள் யாவற்றினும் சிறந்தமைபற்றித் திருப்பணியெனப் பெயர் கூறப்பட்டது. முதுவது - முதிர்ந்தது; பழமையானது. தொன்றுதொட்டது. கோயில்கள் பலவாயினும் சாதி யொருமைபற்றி ஒருமையாகக் கூறப்பட்டது. பழங்காலத்து உண்டாய வென்பதை உணர்ந்து செய்தற்கு முதுவதோர்ந்து என்றார். இனே - இன்னும். கடைக்குறை. இது முதல் வருவன வினைமுடியாத குளகப் பாட்டாக அமைவனவாம். (59) |