| | மங்க லத்தின்ம லிசிவ கங்கையும் | | | கொங்கு லாவுங்கு மாரதி ருத்தமும் | | | அங்க ணந்திக்க ழைத்தரு ளுந்தியும் | | | பொங்கு நீர்விதி யாற்புகுந் தாடுபு. |
(இ - ள்.) நன்மையினால் மிக்க சிவகங்கை யென்னும் தீர்த்தமும், மணம் பரவுகின்ற குமாரதீர்த்தமும், அவ்விடத்தே நந்திதேவருக்காக வரவழைத்தருளிய நந்தி தீர்த்தமும் ஆகிய இவற்றில் மிக்க தீர்த்தமாடும் முறைப்படி சார்ந்து மூழ்கி. (வி - ம்.) கொங்கு - நன்மணம்.1"கொங்குதேர் வாழ்க்கை" என்பது அஃதிப் பொருட்டாதல் அறிக. அங்கண் - அவ்விடம்; அன்றி அழகிய கண்ணையுடைய எனப் பொருளுரைத்து நந்திக்கு அடையாக்கலுமாம். உந்தி - நீர்; உந்திக்கொண்டு செல்வது என்னும் பொருளது. ஈண்டுத் தீர்த்தத்தைக் குறித்தது. நீர்விதி - தீர்த்தமாடும் முறை. அவை இவ்விதத் தீர்த்தத்தில் இன்னின்ன மந்திரஞ்சொல்லி ஆடுக எனவும், இவ்விடத்து நின்றாடுக எனவும் குறித்த செயல்கள். ஆடுபு - ஆடி : செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். (60) | | வீடு நல்கிய வீராட்ட காசத்தின் | | | ஆடு மெம்மையு மவ்வயி னன்பர்நோய | | | சாட வைகிய சாமிநா தப்பெயர் | | | நீடு மேந்தனி லையும்ப ணிந்துபோய். |
(இ - ள்.) வீடுபேற்றைத் தருவதாகிய வீராட்டகாசத் தீர்த்தத்தில் மூழ்குகின்ற எந்தப் பிறப்பினும் அவ்விடத்திலேயே அன்பர்களின் நோயானது தீர்க்க எழுந்தருளியிருக்கின்ற சாமிநாதன் என்னும் பெயரையுடைய அழியாத முதல்வனாகிய முருகப்பெருமான் திருவடிவத்தையும் வணங்கிச் சென்று. (வி - ம்.) வீராட்டகாசம் - வீராட்டகாசத் தீர்த்தம். ஆடும் - மூழ்குகின்ற. எம்மையும் - எந்தப் பிறப்பினும், அம்மை, மறுமை யென்பனபோல. வயின் - இடம். சாட - தீர்க்க; கெடுக்க. ஆண்டு முருகப்பெருமான் சாமிநாதன் என்னும் பெயர் கொண்டிருந்தனன் என்ப. ஏந்தல் - உயர்ந்தோன்: ஈண்டு முருகப்பெருமான். நிலை - நிற்கின்ற இறைவன் வடிவம். பணிந்து - (61) | | வான ளாவிய மல்லல்வ ரையிவர்ந் | | | தானி ருந்தரு ளாவச்ச காயனோ | | | டீன மீருங்கு மாரலிங் கந்தொழா | | | ஞான சத்தித ரனையு நண்ணுவோர். |
(இ - ள்.) வானத்தைத் தொடும்படி உயர்ந்த வளப்பம் பொருந்திய திருத்தணிகை மலைமீதேறி அவ்விடத் தெழுந்தருளியிருக்கின்ற அந்த "ஆபத்துச் சகாயழுனென்னும் திருப்பெயருடைய விநாயகக் கடவுளுடன் துன்பங்களையெல்லாம் கெடுக்கின்ற குமாரலிங்கப் பெருமானையும் |