| (இ - ள்.) விருப்பு அறிவு வினையென்னும் இவைகள் மூன்றனையும் தன் தகட்டுவடிவாய்க் கவடுவிட்டுச் செழித்து மேலெழுந்துள்ள வடிவின் இயல்பால் கடலின் நீரறச் சுண்டச் செய்த கூரிய வேற்படையை ஒப்பற்ற தன் வலக்கைக்கண் அமைத்துத், தன்னை விரும்பாத பகைவரை ஒறுக்கின்ற மற்றொருகைத் தாமரை மலரைத் தம் தொடைக்கண் அமைத்துத் தேவர்களும் வித்தியாதரர்களும் சூழ்ந்திருக்கின்ற தன்மையையுடைய உணர்வுவலியைக் கொண்ட முருகப்பெருமானது திருவுருவத்தை ஆக்குவோர்களும். (வி - ம்.) இச்சா - இச்சை; விருப்பு. ஞானம் - அறிவு. ஈண்டு மயக்கமில்லா உண்மையுணர்வு. கிரியை - வினை, தொழில். முழுமுதற் கடவுளாகிய முருகப்பெருமான் தன் விருப்பால் ஒன்றை எண்ணி அதனைத் தொழிற்படுத்து முடிக்கின்றான். அவனால் இயற்றப்படும் ஐவகைத் தொழில் முறைகளையும் அவன்றன் அளப்பரும் ஆற்றலையும் வேற்படையின்மேல் வைத்துக் கூறியவாறு. வேலை ஞானசத்தியாகவும் வள்ளிநாயகியாரை இச்சாசத்தியாகவும், தெய்வயானையம்மையாரை கிரியாசத்தியாகவும் கொள்ளலுமுண்டு. இக்கருத்தை, | | 1 "ஈறிலாதவள் ஒருத்தியே ஐந்தொழில் இயற்ற | | | வேறு வேறுபேர் பெற்றழுஎன " |
என்றும், | | 2 "பரையாதி விருப்பறிவு தொழிலாகி உலகமெலாம் | | | படைத்துக் காத்து | | | வரையாது துடைத்துமறைத் தருளியவை நின்றுந்தன் | | | வடிவு வேறாய் | | | உரையாதி மறைகடந்த ஒருமுதல்வி" |
என்றும் ஆன்றோர் விரித்துக் கூறலான் அறியப்பெறும். வேற்படை ஏனைய படைகள்போலாது அடிப்பகுதி நீண்டும் மேற்பகுதி கூர்ந்தும் உட்பகுதி விரிந்தும் இருத்தலான் அஃது உணர்வுதரும் குறியாக அமைத்துக் காட்டினர். அதை வலப்புறக் கையொன்றில் கொண்டும் மற்றொருகையைத் தொடையின்மேல் வைத்தும் இருக்கும் திருக்கோலம், தம் அடியவர் துயர்களைந்து இன்பப் பேறாக்கும் தன்மைத்தாக இருத்தலின், அக்கோலத் திருவுருவத்தை அமைத்தலும் வழிபடலும் முதன்மையாகும்; ஆகலான், "உருவம் விதிப்போரும்" என்றார். இப்பாட்டுக் குளகமாய்ப் பிற்பாட்டுக்களின்மேல் வினைமுடிவு பெற நிற்றலால், எச்சப் பொருளில்நின்று தொடர்வதாக அமைந்துளது. (64) | | வைவாய்க் கணிச்சிப் படையென்ன வதிவித் திடுங்கோ வணத்தண்டு | | | கைவாய் வலத்தி னமைத்தருளிக் கடியி லிடக்கை பதித்தருளி | | | ஐவாய் வழங்கும் பொறிபுலனை யவித்த வுறுவ ரிமையவர்கள் | | | உய்வா னிறைஞ்ச வருள் வழங்குங் கந்த னுருவ முஞற்றுநரும். |
| 1., 2.திருவிளை, திருநாட்டுப் : 16; தடாதகைப் : 22. | |
|