| குண்டிகை - நீர்க்கமண்டலம். வாமம் - இடப்பக்கம். புரவு - புரத்தல்; காத்தல். உகரவிகுதிபெற்ற தொழிற்பெயர். அக்கவடம் - உருத்திராக்கமாலை. எல்லா உலகும் என்றது, மேல் நடு கீழ் என்னும் மூவகை உலகங்களை. பிரமனைக் குட்டிச் சிறைசெய்தாராகலின் "பிரமசாத்தன்" எனப்பட்டார். பிறக்குநர் - பிறங்கச் செய்வோர், அல்லது பிறக்கச் செய்வோர்; உண்டாக்குவோர். (75) | | அல்யாப் பவிழ்க்கும் வலக்கரங்க ளபய மக்க வடந்தாங்க | | | வெல்யாப் புறுத்த மணிக்கடமுங் கடியு மிடக்கைத் தலஞ்சேரச் | | | சொல்யா ழனைய வள்ளிவலந் துன்ன மணிநீ ரரிவாக்கக் | | | கல்யா ணத்தி னெழில்வாய்ந்த கடவு ளுருவங் காண்போரும். |
(இ - ள்.) இன்பத் துன்பங்களாகிய கட்டுக்களை அவிழ்த்தருளுகின்ற வலப்புறக் கைகளில் அபயமும் உருத்திராக்கக் கோவைகளையும் கொள்ள, ஒளி அடங்கியுள்ள மணியழுத்திய கைக்காப்புகளும் திருவரையும் இடக்கை பொருந்த, யாழினது இன்னிசையை யொத்த மென் சொற்களையுடைய வள்ளிநாயகியாரை வலப்பக்கத்துப் பொருந்த திருமால் தெளிந்தநீரால் தாரைவார்த்துக் கொடுக்கத் திருமணத் திருக்கோலத்தின் அழகுவாய்ந்த கடவுளரான முருகப்பெருமானது, திருவுருவைச் செய்வோரும். (வி - ம்.) இதில், அபயமும் திருவுருத்திராக்க மணிக்கோவையும், வலக்கைகள் ஏந்தவும், மணியழுத்திய காப்புகளும், திருவரையும் இடக் கைத்தலம் சேரவும், வள்ளிநாயகியார் வலப்புறம் சேரவும், திருமால் தாரைவார்த்துக் கொடுக்காநிற்பத் திருமணக் கோலத்தோ டிருந்த திருவுருவம் இதிற் குறிக்கப் பெறுகின்றது. அல் - இருள். ஈண்டு இன்பத் துன்பங்கள்; இவையிருக்கையில் துன்பத்தில் ஆழ்த்தி அறிவை மறைத்தலின் அல் எனப்பட்டது. யாப்பு - கட்டு; தளை. எல் - ஒளி. கடகம் - கைக்காப்பு. யாழ். அதன் இசைக்கு ஆகுபெயர். மணிநீர் - தெளிந்தநீர். "மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சி" என்றும், "மணிநீரும் மண்ணும்" என்றும் வரும் ஆன்றோர் வழக்கான் அறிக. அரி - திருமால். அன்றி அரசரானோர் திருமால் சாயலென ஆன்றோரால் கூறப்படுதலின், வள்ளி நாயகியார் தந்தை வேடர்கட்கு வேந்தனாகலான், அரியெனக் கூறினாரென்றலுமாம். (76) | | கடியி லிடக்கைத் தலமிருவிக் கமலம் வலக்கைத் தலமேந்தி | | | அடியின் மணிக்கிண் கிணிகவைஇ யமரும் பால வுருத்தோற்றி | | | முடிக ளுரிஞ வெதிர்வணங்கு முகுந்தன் முதலோர்க் கருள்சுரக்கும் | | | படியி லெழிற்சுப் பிரமணிய பகவ னுருவம் பயிற்றுநரும். |
(இ - ள்.) திருவரையின்மீது இடக்கையை இருத்தித், தாமரை மலரை வலக்கையிற் கொண்டு திருவடியின்மீது மணிகளழுத்திம் சதங்கை பூண்டு பொருந்திய இளந் திருக்கோலத்தைக் காட்டித், தர தலையிலணிந்த திருமுடிகள் தேய நேரில் கீழ்வீழ்ந்து வணங்குகின்ற திருமால் முதலானோர்க் கருள்சுரந்தருளுகின்ற ஒப்பற்ற அழகுபொருந்திய முருகப்பெருமானது திருவுருவத்தை ஆக்குவோர்களும். |