பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்43

 பரியா விமையோ ரவணிற்குமப் பண்பு தோற்றும்
 வரிபா டளிவீ ழமணிக்குமிழ் பூத்த மாண்பு.

(இ - ள்.) இசைப் பாட்டைப் பாடுகின்ற வண்டுகளானவை விரும்பும் வண்ணம் அழகிய குமிழ்மரங்கள் பூத்த தன்மையானது, தேவர்கள் விரிந்த முல்லைநிலத்தின்கணுள்ள மலர்களின் வாசனை நுகர்ச்சியை விரும்பித் தத்தமக்குரிய ஒவ்வொரு மூக்கான் அவ்வாச நுகர்ச்சி அமையாமல் அளவில்லாத நாசிகளைத் தாங்கி, அந்நிலத்தில் நிற்குமப் பண்பினைக் காட்டாநின்றன.

(வி - ம்.) கான் - ஆகுபெயர்; உரியநாசி - பெயரெச்சத் தீறு தொக்கது; உலப்பற்ற - அளவற்ற; அப்பண்பு - பரித்த பண்பு; பரியா - செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்; வரி - இசைப்பாட்டு.

(64)

 மானா கமலர்த் திருமாதவ னாகி மாயோன்
 ஆனா வொளிநா முறவள்ளியை யீன்ற வாற்றான்
 நாநா ளுமிவற் றணவேமென நண்ணி யாங்குத்
 தாநா ளுமிகுந் துழல்கின்றன தாவு மான்கள்.

(இ - ள்.) (அம் முல்லைநிலத்தின்கண்) தாவுகின்ற மானினங்கள் தாமரை மலரிலெழுந்தருளியுள்ள இலக்குமி மான் வடிவாக மாயோன் பெரிய தவத்தையுடைய சிவமுனியாகி யாங்கள் அமையாத புகழையடைய வள்ளியம்மையாரைப் பெற்ற தன்மையால் யாமெப்பொழுது மிம் மாயோனைவிட்டு நீங்குவே மல்லமென்று கருதிப் பொருந்தியதைப் போலத் தாங்களெந்நாளு மிக்குற்றுச்
சஞ்சரிக்கின்றன.

(வி - ம்.) மலர்த்திரு மானாகவெனவும், மாயோன் மாதவனாகி யெனவு மாற்றுக; மாதவன் - சிவமுனிவன்; ஒளி - புகழ்; நாமென்றது மான்களை; இவன் - மாயோன்; தணத்தல் - நீங்கல்.

(65)

 தணியா விமையோர்க் குணவூட்டுநர் சால வாங்கண்
 அணிநா மணியார்ப் பெழுநூன்முறை யாய்ந்த தேபோன்
 மணியார்ப் பெழவெங் கணுமேய்வது மண்ண கத்தோர்
 பணிதே வரெலா ருமுறுப்பிற்ப யின்ற நல்லா.

(இ - ள்.) அம் முல்லைநிலத்தில் பூமியிடத்துள்ளோர் வணங்குகின்ற எல்லாத் தேவர்களும் தம் முறுப்பிற்றங்கிய நல்ல பசுக்கூட்டங்கள் தம்மை வழிபடுவார்க்கு அருள்செய்தலிற் குறையாத தேவர்களுக்கு உணவை உண்பிக்கின்ற சிவாசாரியர்கள் அழகிய நாவினோடு கூடிய மணியோசையை யெழுப்புதற்குக் காரணமாகிய (சிவாகமமாகிய) நூன் முறையை மிக ஆய்ந்ததைப்போல் கழுத்திற் பூட்டியமணி யார்ப்பெழும்படி எவ்விடங்களிலு மேயாநின்றன.

(வி - ம்.) ஆங்கு நல்லா ஊட்டுநர் எழுப்பும் நூன்முறை சாலத்தாங்களு மாய்ந்ததுபோல மேய்வதாகுமென முடிக்க. இனி நல்லா மேய்வதுபோன்ம் என முடிப்பாருமுளர்; எழு - எழுப்புகின்ற நூன் முறையையெனப் பிறவினை வினைத்தொகை யாக்குக. தேவர்கள் உறுப்