பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்431

நடுங்க ஏறிச் செலுத்துகின்ற மயிலூர்தியையுடைய தலைவனாகிய முருகப்பெருமானது திருவுருவத்தைச் சமைக்கின்றோர்களும்.

(வி - ம்.) இதில், வேற்படை அபயம் ஆகியவற்றை வலப்பால் திருக்கைகள் இரண்டினும், கொடை, வச்சிரப்படை ஆகியவற்றை இடப்பால் திருக்கைகள் இரண்டினும் அணிந்துகொண்டு கடலும் மலைகளும் உலகங்கள் யாவும் ஏறிச் செலுத்துகின்ற மயிலூர்தியைக் கொண்ட முருகப்பெருமானது திருவுருவம் குறிக்கப் பெறுகின்றது.

புலிங்கம் - நெருப்புப்பொறி. கதித்தல் - மிகுதல்; ஈண்டு நெருப்புப் பொறி மிகுதலைக் குறித்தது. தும்முதல் - வெளிவிடுதல். இங்கு நெருப்புக் கக்குதல் : வேற்படைக்கு அடைமொழி. திரை - அலை; எழு : முதனிலைத் தொழிற்பெயர். மேலேயெழுதல். உயர்ந்திருத்தல் என்னும் பொருளது. அனைத்தும் - எல்லாம். உலகம் மேல் நடு கீழ் என முத்திறத்ததாகலின். அவ்வெல்லா உலகமும் என்றபடி. குலுங்க - நடுங்க; அசைய : கடவும் - செலுத்துகின்ற. எதிர்காலம் பெயரெச்சம். கோமான் - தலைவன். முருகப்பெருமான் எல்லாக் கடவுளர்களினும் உயர்ந்தோனாகலான் கோமான் என்றனர். என்னை?

 1 "பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
            புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
            வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
            உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
            மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
            நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
            வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
            தீரிண் டேந்திய மருப்பின் எழில்நடைத்
            தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
            எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
            . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
           உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்
           அந்தரக் கொட்பினர் வந்துடன் காண "

எனவும்,

 2 "செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள "

எனவும் பிற சான்றோர்களும் முருகப்பெருமானைச் சுட்டிக் கூறுதலானும் உணரப்படும்.

(79)

 ஈண்டு விளங்க வெடுத்துரைத்த வீரெண் ணுருவ மேயன்றி
 வேண்டி முருக னெடுத்தருளும் வெவ்வே றுருவ மமைப்போரும்
 மாண்ட வள்ளி தெய்வமட மாதருருவம் வகுப்போரும்
 ஆண்ட வீரர் முதலான வமர ருருவ மாக்குநரும்.

(இ - ள்.) இச் செய்யுள்களிடத்தே விளங்குமாறு எடுத்துக்கூறியு பதினாறு திருவுருவேயன்றி விரும்பி முருகப்பெருமான் எடுத்தருளுகின்ற

 1.  திருமுரு. 150 - 174, 
 2.  திருச்செந்தூர்ப்பிள். செங்கீ.