| இன்னும் வேறுவேறான திருவுருவங்களை ஆக்குவோரும், (யாவர்க்கும் அருளைச் செய்ய) விரும்புகின்ற தெய்வயானையம்மை வள்ளிநாயகியார் திருவுருவங்களை ஆக்குவோர்களும் என்னை ஆட்கொண்டருளிய ஒன்பது வீரர் முதலான தேவர்களின் திருவுருவங்களைப் படைப்போர்களும். (வி - ம்.) வீரர் - ஒன்பது வீரர்கள். உமையம்மையாரின் காலடிச் சிலம்பு மணிகளில் தோன்றிய ஒன்பது சத்திகளின்பால் தோன்றியவர் : வீரவாகு, வீரகேசரி, வீரமகேச்சுரர், வீரபுரந்தரர், வீரராச்சுதர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்போர். இவர் பிறப்பு முதலியவற்றைக் கந்தபுராணம் துணைவர்வரு படலத்து விரிவுறக் காண்க. இவ்வரலாற்றை, | | 1 "மங்கை சிலம்பின் மணியொன் பதில்தோன்றும | | | துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் | | | விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன் | | | மருப்பாயும் தார்வீர வாகு " |
எனவரும் கந்தர்கலி வெண்பாக் கண்ணிகளானும் அறியலாம். (80) | | இம்மைப் பிறப்பிற் பிணிதுமிய வெதிரில் செல்வத் திடைமூழ்கி | | | மம்ம ருறுக்கும் பகைநீங்கி வைய முழுதும் பணிகேட்பக் | | | கொம்மை முலையா ரின்பநலங் கூட்டுண் டான்ற மகவுயிர்த்துச் | | | செம்மற் குணத்துத் தலைநின்று திகழ வாழ்ந்து கடைநாளில். |
(இ - ள்.) எடுத்த பிறப்பில் பிணிகள் தொலைய ஒப்பற்ற செல்வத்தில் திளைத்து மயக்கத்தைத் தருகின்ற பகை நீங்கப்பெற்று உலகம் முழுதும் தம்பணி கேட்டுநிற்ப, இளமை பொருந்திய கொங்கையராகிய இளமகளிரின் இன்பநலந் துய்த்து அறிவறிந்த இருபால் மக்களைப் பெற்றுச் சிறந்த குணத்தின் முதன்மைபெற்று நின்று சிறப்புற வாழ்ந்து பின்னாளிலே. (வி - ம்.) இம்மை - இப்பிறப்பு; எடுத்தபிறவி. துமிய - கெட. எதிர் - நேர், ஒப்பு. மம்மர் - மயக்கம். கொம்மை - இளமை. கூட்டுண்ணல் - கொள்ளைகொண்டுண்ணல்; மிகத் துய்த்தல். ஆன்ற - நிறைந்த. மக - மக்கள்; குழந்தை. செம்மல் - முதன்மை; சிறப்பு. (81) | | திமிரப் படலங் கிழித்தொதுக்குஞ் செறிவெங் கிரண வுருவாய்ந்த | | | அமர ராகி யொளி பிழம்ப வடுத்த விமான மேல்கொண்டு | | | நிமிரும் புகழெண் டிசைபோர்ப்ப நெடுவான் மலர்மா ரிகடூர்ப்பத் | | | தமர மிகுந்துந் துமிமுழங்கச் சங்கும் வயிரு நனிநரல. |
(இ - ள்.) இருட் கூட்டங்களைக் கிழித்து ஓடச்செய்கின்ற திரண்ட விரும்பத் தக்க ஒளிக்கதிர்களை உடைய உருவம் பொருந்திய தேவர் வடிவுபெற்று ஒளிகள் ஒன்றுபடப் பொருந்திய வானூர்தியின் மேலேறி |