பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்433

யிருந்து, உயருகின்ற புகழானது எட்டுத்திசைகளினும் சென்றுசேர நீண்ட வானகத்து அமரர் மலர்மழை பொழிய ஒலிமிக்க துந்துபி (பேரிகை, முரசு) பேரொலி செய்யச் சங்குகளும் கொம்புகளும் மிக முழங்க.

(வி - ம்.) திமிரம் - இருள். படலம் - கூட்டம்; திரள். அமரர் - தேவர். பிழம்ப - கூட்டத்தையுடைய : பன்மை. விமானம் - வானூர்தி. "வலவன் ஏவா வானவூர்தி" எனப் பிறருங்கூறுப. போர்ப்ப - மூட; நிறைய. வான் : ஆகுபெயராக வானுலகத்துள்ளாரைக் குறித்துநின்றது. மலர்மாரி - மலராகிய மாரி : இரு பெயரொட்டு. தமரம் - ஒலி. துந்துபி - பேரிகை. இதனை இக்காலத்தவர் நகரா' எனக் கூறுவர். வயிர் - ஊதுகொம்பு; பெருவங்கியம், சிறுவங்கியம் என வழங்கும் இயங்கள். சங்கும் கொம்பும் பேரிகையுங் கொண்டு, தலைவர்களையோ பண்பாலும் அன்பாலும் ஒழுக்க முதலிய உணர்வு மிக்காரையோ வரவேற்குங்கால் முழக்குவது மரபு. அம்முறையில் இறைவன் முருகப் பெருமான் திருவுருவைப் பல்வகை உருவில் தீட்டி வணங்கலுறுவார்க்கு வரும் சிறப்பு இஃதென இதில் குறித்தவாறு.

(82)

 களிவண் டெனநின் றிறுமாக்குங் கண்ணின் வழியே மனஞ்செல்ல
 ஒளிவண் டணிந்த செம்பதும முறழ்கை வழியே விழிநடப்பத்
 தெளிமின் னனைய வரமகளிர் தெய்வ நடன மெதிர்குயில
 நளிதண் கடலி னமிழ்தென்ன நரம்புங் குரலு மிடைமயங்க.

(இ - ள்.) கள்ளுண்டு களிக்கும் வண்டென்று கூறுமாறு நிலைபெற்றுச் செருக்குக் கொள்கின்ற கண்களின் வழியே மனம் போகாநிற்ப, ஒளி பொருந்திய வளையல்களணிந்த செந்தாமரை மலரையொத்த கைகள் செல்லும் வழிக்கண், கண்கள் செல்ல, தோன்றிய மின்னற்கொடி போன்ற அரமங்கையர்களின் தெய்வத்தன்மை பொருந்திய நடனம் எதிரே நடைபெறப் பெருமைபொருந்திய குளிர்ச்சியையுடைய கடலில் தோன்றிய அமிழ்தென்னும்படி யாழின் இசையும் மிடற்றுப்பாடல் இசையும் நடனத்தின் இடையிடையே தோன்றி ஒன்றுபட.

(வி - ம்.) களி - களிப்பு; கள்ளுண்டலால் உண்டாகும் நிலையில்லா மகிழ்ச்சி இறுமாத்தல் - செருக்குறல். வானரமங்கையர் நடனங் குறித்துரைக்கின்றார்; நடமிடும் மகளிர், கண்களின் குறிப்பு வழியே மனமும், கைகளின் அபிநய வழியே கண்களும் செல்லுதலால், அதனையே ஈண்டு விளக்கியுரைத்தார். தெளி - தெளிந்த, வெளித் தோன்றிய. மின் - மின்னற்கொடி. குயில - நடக்க. நளி - பெருமை. 1 "தடவும் கயவும் நளியும் பெருமை" என்பது தொல்காப்பியம். நரம்பு, குரல் என்பன ஆகுபெயராக அவ்வவ் விசையைக் குறித்து நின்றன.

(83)

 முற்ற வுணர்ந்தோர் முதுக்குறைவு முரியு மகளிர் கரத்தேந்திக்
 கற்றைக் கவரி புடையிரட்டக் கதிர்வெண் கவிகை மேனிழற்ற
 ஒற்றி மணிவேத் திரக்கரத்தோ ருறுமா சனத்தின் றிரள்விலக்க
 வெற்றி யிமையோ ரெதிர்கொள்ள வெய்து விசும்பின் வழிநீந்தி.