| அற்றைக்கு முதனாள் இரவு வேந்தன் கனவில் இறைவன் காட்சி கொடுத்து "மன்னவ! எமக்காகத் திருநின்றவூரில் பூசலார் அமைத்த திருக்கோவிலில் நாளை யாம் குடிபுகுவேம்; "நீ வேறொரு நாளில் குடமுழுக்குச் செய்க" என்றருளினர். பின்னர் அரசன் திடுக்கெட்டெழுந்து, இறையருளுக்கு வியந்து தன் பரிவாரங்களோடு திருநின்றவூர் சென்று பார்க்குங்கால், புதிதாக அமைத்த கோயிலொன்றுங் கண்டிலன்; மன்னன் அங்குள்ளார் பலரை வினாவியும் அறியானாய்ப் பூசலாரைக் கண்டுகொண்டான்; அவர் நாம்தாம் உள்ளத்தில் கோயிலை யெழுப்பினோம்; அதற்கு இன்று குடமுழுக்கு விழா என்பதையும் விளக்கிக் கூறினர். பின் அரசன் வணங்கிச் சென்றனன். இதனை இறைவன் கூற்றாகவரும் பெரியபுராணச் செய்யுள் இனிதுணர்த்துவதாகும். | | 1 "நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த | | | நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம் நீயிங் | | | கொன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய் " |
என முழுமுதற் பொருளான இறைவனே கூறினா னெனின்? அகத்திற் கொள்ளும் உண்மையன்பே இறைவற்கு உகந்ததென்பது பெறப்படும். அதனால் ஈண்டும் முருகப்பெருமானுக்குச் சித்திரித்தேனும் திருவுருவமைக்க மனத்திற் கருதுவோர்க்கு உருவமைத்தோர்க்கு எய்தும் பயன்யாவும் பயப்பது உண்மையே என்றார். (87) | | சரியை கிரியை யோகத்துத் தலைநின் றவர்கள் வேலுயர்த்தோற் | | | குரிய வுருவி னொன்றாக வுஞற்றிற் றியானித் தேத்தெடுப்பின் | | | அரிய பூசை விழாவாதி யாற்றி னவர்கள் பெறும்பேற்றைத் | | | தெரிய வுரைத்த லரிதாகுந் தெள்ளித் தெளிந்த முனிவரனே. |
(இ - ள்.) சரியை கிரியை யோகமாகியவற்றில் மேலோங்கி நின்றோர்கள் வேற்படையை மேலாகக்கொண்ட முருகப்பெருமானுக்குரிய திருவுருவங்களில் ஒன்றேனும் செய்தாலும், அவற்றுள் ஒன்றைக் கருதிவந்தாலும் தொழுது போற்றினாலும் அருமையான வழிபாடு திருவிழா முதலியன செய்தாலும் அவர்கள் அடைகின்ற பெறலருஞ் சிறப்பை விளங்குமாறு எடுத்துரைப்பது அருமையதாகும்; மிகத் தெளிவுபெற்ற முனிவர்களுட் சிறந்தோனே. (வி - ம்.) சரியை - புறத்தொழில் மாத்திரையால் உருவத் திருமேனியை வழிபடுதல். கிரியை - சிவாகமங்களில் விதித்தவாறு சிவ பெருமானை அகத்தும் புறத்தும் வழிபடுதல். யோகம் - ஐம்புலன்களைத் தன் வயப்படுத்திக் கொண்டு மனத்தை இறைவன்பால் நிறுத்துதல். இம் மூவகை நெறிக்கண் நின்றாரும் திருமுருகப்பெருமான் திருவுருவமைத்து வழிபடின், அதனால் அவர்கட்கு வரும் அரும்பயன்களை அளவிட்டுரைத்தல் ஒல்லாது; அவர் நினைந்த நல்லனயாவும் ஒருங்கே கிட்டும் என்றபடி. தெளிந்த முனிவரன் - அறிவுத் தெளிவுபெற்ற அகத்திய முனிவன். (88) | | பலகூ றுவதெ னருள்புரிந்து பணிக்குந் தேவர் பலருள்ளும் | | | இலைவேற் படைகைத் தலத்தமைத்த விறையே நனிமிக் குயர்தேவன் |
|