பக்கம் எண் :

444தணிகைப் புராணம்

கலந்து நீ்ர் வற்றிக்கிடக்கின்ற மண்ணினது தோற்றம் பொன்மை கலந்த செந்நிறம் ஆம். இது பூமியின் பழைய நிறத்தைக் காட்டுவதாகக் குறித்தார். அதற்குக் கீழ்க்கண்டவாறு புராண வரலாறு காண்க.

ஓர் ஊழிக்காலத்தில் திருமால் செவியிலிருந்து மது, கைடவன் என்னும் இருவர் அசுரர் தோன்றினர். அவர் உடனே திருமாலைப் போருக்கழைத்துத் திருமாலோடு போர்புரிந்தனர். திருமாலால் அவ்விருவரையும் வெல்ல ஏலாதாயிற்று; களைத்துநின்றனர். அவ்விருவரும் திருமாலை நோக்கி, "நுமக்கு எங்களுடன் போர்செய்யும் வன்மையில்லை; அதனால் போர் செய்தலிற் பயனில்லை. யாம் உமக்கு வேண்டும் வரங்களைத் தருகின்றோம்; கேளுமென்றனர். உடனே திருமால் சூழ்ச்சியாக எண்ணி "உங்களை நான் கொன்று வெற்றிபெறும் வரம் தருக" என்றனர். அவ்விருவரும் அவ்வாறே வரம் ஈந்தனர். பின் இருவரையும் திருமால் தம் தண்டினால் அடித்துக் கொன்றனர். அவ்விருவர் தசைகளும் உலகெங்கும், மிகப் பரந்து செந்நிறக் காட்சியாக இருந்தது. அவர்தம் புலால் சிதறிக்கிடந்ததால் அதுமுதல் பூமிக்கு "மேதினி" என்னும் பெயர் வந்தது. செம்மைகலந்த வெண்மையாகிய கொழுப்புடன் கூடியிருக்கும் புலாலின் நிறத்துக்கு இச் செந்நிறக் குங்குமச்சேறு பொற்பொடியோடு கலந்து சுவறிய தன்மை உவமமாதலின் "பூமியின் தொன்னிற மிதென்னுமே" என்றார்.

(101)

 புழுகுமிக்க ளாவலிற் புளகவெம்மு லைத்தலை
 இழுகிவீழ்ந்த சாந்தமங் கியங்குதாளி ழுக்குவ
 முழுகுகட் பசுந்தொடை மொய்த்தகுப்பை யிடறுவ
 ஒழுகொளிக்க லன்களிற்று வீழ்ந்தகாலு டற்றுமே.

(இ - ள்.) அங்குள்ள இளமங்கையர் புழுகினை மிகப் பூசுதலால் மயிர்க்கூச் செறிகின்ற விரும்பத்தக்க கொங்கைகளினின்றும் பரவிக் கீழ் வீழ்ந்த சந்தனக்குழம்புகள் அங்குச் செல்வோரின் கால்களை வழுக்கா நிற்பன; (மைந்தரும் மகளிரும் அணிந்து கழித்துப் போகட்ட) இடத்தை மறைக்கின்ற செவ்விய பூமாலைகளாகிய நிறைந்த குப்பைகள் (செல்வோர் கால்களை) இடறுவனவாகும்; இடைவிடாத ஒளியையுடைய அணிகள் கீழ்வீழ்ந்து கிடப்பன, செல்லும் கடாயானைகளின் கால்களை உறுத்தி வருத்தா நிற்கும்.

(வி - ம்.) நகரச் செல்வத்தின் சிறப்புத் தோன்ற வீறுகோளணி நயமமைத்து இப்பாட்டில் கூறுகின்றார். புழுகு - புனுகு. மங்கையர்தம் கொங்கை முற்றத்து மணங்கமழப் புழுகையணிதலால், முன்னர்ப்பூசிய கலவைச் சந்தனச்சேறு கீழே தெருவெங்கும் இழுகி வீழ்கின்றன; அதனால் நிலம் சேறுபடுகின்றது; அங்குச் செல்வார்தம் கால்கள் அச்சேற்றால் வழுக்கலுறுகின்றன; அம் மகளிரும் மைந்தரும் அணிந்து வாடியபின் கீழே கழற்றியெறிந்த மாலைகள் குப்பை மேடுபோல் குவிந்து கிடத்தலால் அவை நடப்போர் கால்கள் நெறிச் செல்லாவாறு தடுத்து இடறிவிடுகின்றன; மகளிர் தம் ஊடற்காலத்து வெறுத்தெறிந்த இரத்தின மணிமாலைகள் தெருவெங்குங் கிடந்து நெறிச் செல்லும் களிற்றியானைகளின் அடிகளை உறுத்தி அவற்றுக்குத் துன்பஞ் செய்வனவாயின. எனவே, வழிவிலங்கு பகையல்லது கலங்குபகை வேறின்மையும் செல்வச் செழிப்பும் இதனால் உணர்த்தப்பட்ட தறிக. இக் கருத்தொப்ப,