| இக்கருத்தை, | | "தத்துவமென் றாறாறும் தாம்கடந்து போயறத்தில் | | | எய்த்தவர்க்குக் காட்டும் இயல்பினான்" |
எனச் சிவப்பிரகாசர் அருளியதும் காண்க. இவற்றின் விரிவெல்லாம் ஈண்டெடுத்துக் கிளப்பின் மிக விரியு மாதலான் சிவஞானபாடியம், சிவஞான சித்தியார் போன்ற ஞானநூல்களில் தெளிவுபடக் காண்க. தோம் - குற்றம். மின் - மின்னல் தோன்றி மறையும் காலவெல்லை; அந்த அளவுள்ள சிறிது காலத்துக்குங்கூட அவர் குற்றமின்றி இருக்கும்நிலை ஈண்டுக் குறிக்கப்பட்டது. | | "குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | | | கணமேயும் காத்தல் அரிது" |
என்னும் தேவர் குறளறமுங் காண்க. (105) | | தாளதாம ரைகளுந் ததைந்தவோதி மங்களும் | | | வாளையாரல் கெண்டைமீன் வரான்மலங்கு நித்தலும் | | | ஆளுமன்ன நீரதா யாடினாரி ருண்மலக் | | | காளநீவு றுஞ்சிவ கங்கைகண்ட டுத்தனன். |
(இ - ள்.) நாளங்களையுடைய தாமரைகளும், கூட்டமான அன்னப் பறவைகளும், வாளை ஆரல் கெண்டை வரால் மலங்கு ஆகிய மீன்களும், நாள்தோறும் குடிகொண்டிருக்கின்ற அத்தன்மையுடையதாய். அதில் மூழ்கினாருடைய இருளுடைய மலமாகிய நஞ்சைக் கெடுத்தலை யுடைத்தாகிய சிவகங்கை யென்னும் தடாகத்தைக் கண்டு சார்ந்தான். (வி - ம்.) தாள - தாள்களையுடைய; ஈண்டுப் பலவின் படர்க்கை அஃதாவது தாமரைகளின் அடித்தண்டு. இது, நாளமெனவும் வழங்கும். ஓதிமம் - அன்னப்பறவை. மலங்கு - பாம்புபோன்ற தலையும் உடலுங்கொண்டு மீன்வால்போல் வாலும் உள்ள நீண்ட வடிவமைந்த ஒருவகை மீன். நித்தல் - நித்தம்; நாள்தோறும் : இறுதிப்போலி. இருள்பலம் - மயக்கத்தைத் தரும் ஆணவமலம். காளம் - நஞ்சு. பாம்புக் கடியினால் நஞ்சேறி ஒருவன் உடலை மாய்த்தொழித்தல்போல, மலமும் ஓர் ஆன்மாவின் தன்னிலையை மறக்கச்செய்து கெடுத்தலின் இருள்மலக் காளம் என்றனர். சிவகங்கைக்கண் மூழ்கினார்க்கு அம்மலப்பிணிப்பை ஒழித்தலால் "காளநீவுறுஞ் சிவகங்கை" என்றார். (106) வேறு | | சிலைபிளந்து தெவ்வியாறு சென்றொதுக்கும் வச்சிரம் | | | தலைசுருங்கு சங்குளைந்து தந்தநித்தி லங்கஞல் | | | குலைகளங்க கழ்ந்தெறிந்து கோலமல்க மாமதி | | | வலையமாகி யங்கண்மாத வங்குயிற்றன் மானுமே. |
|