| | தோற்றிக் கிளையோ டினிதுண்டின மூன்றுந் துன்றப் | | | போற்றிக் குடிமல் கியபொற்பின பாடி யெல்லாம். |
(இ - ள்.) ஆயரூர்களெல்லாம் குலையோடுகூடிய கதிரைக் கக்குகின்ற வரகின் பயிரும் சாமை சோளம் மிகவுமுயர்ந்து வளருந் துவரையுமாகிய இவைகளின் பயிர் முதலியவற்றையெல்லாந் தோற்றுவித்துச் சுற்றத்தாரோடு இனிதாக வுண்ணுதலைச்செய்து பசுவுமெருமையும் ஆடுமாகிய மூவினங்களும் விருத்தியடையும்படி பாதுகாத்துக் குடிமக்கள் நிறைந்த பொலிவினை யுடையனவாம். (வி - ம்.) தாறு - குலை; இதனை "தாற்றுக்குலைவர கொடுசாமை" எனவரும் நம்பியகப்பொருளா னறிக. சொன்னல் - சோளம்; தோற்றி - பிறவினை; இனமூன்று பசுவும் எருமையும் ஆடுமாம்; 'மூவின மேய்த்தல் சேவினந் தழுவல்' என்னும் நம்பி யகப்பொருளானறிக. குடி : ஈண்டு மக்களை யுணர்த்தினமையின் ஆகுபெயர். (69) | | குளிர்மென் மொழிநே ருவதென்றுகொ ழுஞ்சு வைப்பால் | | | ஒளிர்செந் தழலுய்த் துறுநாமமற் றொன்ற தாக்கி | | | வளமங் கையர்மத் தினுடைத்தலு மாழ்கி யோவென் | | | றளறுஞ் செயல்போற் குமிறார்ப்பெழுங் காலை யெங்கும். |
(இ - ள்.) அவ் வாயர்பாடி யெங்கணும் நாட்காலையில் அழகினையுடைய இடைக்குல மகளிர் தங்கள் குளிர்ந்த மென்மையாகிய சொல்லைக் கொழுவிய சுவையினையுடைய பால் ஒப்பாவதென்று கருதி அப்பாலை விளங்குகின்ற சிவந்த அக்கினிக்கண்ணே சேர்த்து அதற்குப் பொருந்தும் பாலென்னும் பெயரை (தயிரென்னும்) வேறு பெயராகச் செய்து மத்தினாலுடைக்க வருந்தி ஐயோவென்றலறுஞ் செய்கைபோல முழங்கும் ஒலியெழா நிற்கும். (வி - ம்.) மாழ்கி - வருந்தி. அளறுதல் - அலறுதல் - ஒலித்தல் (போலி). குமிறு வினைத்தொகை : அது பகுதிப்பொருள் விகுதி. தயிர் கடையும் ஒலி பால் அடிபட்டு வருந்தி யலறும் ஒலி போலும். (70) | | வார்கண் டமுலைத் துணைவாண்முக மங்கை நல்லார் | | | கார்கண் டுகவிழ்த் தவிழிப்புனல் கால்செய் தன்பர் | | | தேர்கண் டுமிழோ கைவிழிப்புனல் சேர வாறாய் | | | ஊர்கண் டநெடும் பணைசென்றினி தோம்பு மன்றே. |
(இ - ள்.) கச்சைத் தன்னிடத்தே பொருந்தச் செய்த இரண்டாகிய தனங்களையும் ஒளிபொருந்திய வதனத்தையு முடைய மங்கைப் பருவத்துப் பெண்கள் தந்தலைவர்கள் குறித்துச் சொல்லிய கார்காலம் வருதலைக் கண்டு கண்கள் கொட்டியநீர் கால்வாயாகப் பெருக்கெடுத் தோடுதலைச் செய்து (பின்னர்) தமதன்பராகிய தலைவர்கள் தேர் வரவினைக் கண்டு விழிகள் மகிழ்வாற் கொட்டிய நீருஞ் சேர்தலால் (நதி யாகப்) பெருக்கெடுத்து மருதநிலத் தூர்களிற்பொருந்திப் பெரிய வயல் களிற்போய் அவ்வயல்களிலுள்ள நெற்பயிர்களை யினிதாகப் பாதுகாக்கும். |