பக்கம் எண் :

46தணிகைப் புராணம்

(வி - ம்.) கார் - கார்காலத்தை யுணர்த்தலின் ஆகுபெயர். கால் செய்து - காலாகவோடி; புனலுமும்மை விகாரத்தாற் றொக்கது; ஆறா - செயவெனெச்ச வீறுகெட்டது. ஊர் மருதநிலத்தூர்; கண்ட - செய்த.

(71)

 தடக்குங் குமத்தை யனல்லார்தமி யாய காலைக்
 கிடக்குங் கிடையல் லதில்லாமைகி ளக்கு மாபோற்
 கடக்குங் கழைவார் சிலையான்கணை யாக வேவும்
 அடக்கும் பசுந்தேன் கமழ்முல்லைய ணிந்த முல்லை.

(இ - ள்.) முல்லைநிலமானது குங்குமச் சாந்தையணிந்த முலையையும் அழகையுமுடைய நல்லாராகிய பெண்கள் (நாயகரைப் பிரிந்து) தனியாக விருக்கின்ற காலத்து (காமநோயினாற்) கிடத்தலைச் செய்யும் கிடையென்னுந் தொழிலை யல்லாமல் வேறொரு செயலுமில்லா திருத்தலைப் பிறர்க்கு வெளியிடுமாறுபோல (உலக மூன்றையும்) வெல்லும் நீண்ட கருப்பு வில்லையுடையவனாகிய மன்மதன் (தனியாக விருப்பவர் மீது) அம்பாகச் செலுத்தும் பசிய தேனைத் தன்னகத்தடக்கிய மணம் வீசுகின்ற முல்லைக்கொடிகளை அழகாகக் கொண்டது.

(வி - ம்.) தமி - தனி; கிடை - கிடத்தல்; "முல்லை கிடைகாட்டு மாதே முழுநீலங் கொல்லு மதனம்பின் குணம்" என்னும் (இரத்தினச் சுருக்கச் செய்யுளானறிக. கடக்கும் - வெல்லும்; கிளத்தல் - இருத்தலும் இருத்தனிமித்தமு முணர்த்துதல். முல்லைக்கொடிகளைத் தன்னிடத்துக்கொண்டது முல்லைநில மென்க. அணிந்த தென்னும் முற்றீறுதொக்கது.

(72)

மருதம்

வேறு

 விலகிவில் லுமிழு மோலி வேந்தருக் குறுப்பாந் தாங்கள்
 உலகமூன் றளிக்கும் வேந்தை யும்பனாக் கோட னன்றென்
 றிலகுபே ருழவ ரெல்லா மிந்திர தெய்வம் போற்ற
 அலகில்சீர் வளத்தி னோங்கு மலர்தலைப் பழனச் சூழல்.

(இ - ள்.) விரிந்த விடத்தையுடைய மருதநிலமானது விளங்குகின்ற பெருமை பொருந்திய உழவர்கள் யாவரும் இடைவிட்டுப் பிரகாசத்தைக் கக்குகின்ற முடியையுடைய (ஓருலகத்தையாளும்) அரசனுக்குறுப்பாகிய தாங்கள் மூன்றுலகத்தையுங் காவல் செய்கின்ற இந்திரனையே தேவனாகக் கோடனன்றென்று கருதி இந்திரனாகிய தெய்வத்தைப் போற்றலால் அளவிடமுடியாத சிறப்பினையுடைய வளப்பத்தினாலோங்கு மென்க.

(வி - ம்.) உழவர்கள் வேந்தருக்குறுப்பாதல் "படை குடிகூழ மைச்சு" என்னுங் குறளா னறிக. உறுப்புப் போறலின் உறுப்பென்றார்; உம்பன் - தேவன்; ஈண்டு இந்திரனை யுணர்த்திற்று; "ஓங்குவாவுடை யும்பனயனரி" என்னும் பிரபுலிங்கலீலைச் செய்யுளா னறிக.

(73)