பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்47

 தெவ்விய வவுணர்க் காய்ந்து திருவர சளித்துக் கேண்மை
 வவ்விய விளவன் மாயன் மருங்கக லாமை போலாம்
 நவ்விய புறவஞ் சூழ்ந்த நறும்புனற் சூழற் கின்பம்
 கவ்விய கற்ப வேந்தன் கடவுளாய் வதியும் வண்ணம்.

(இ - ள்.) மான்களையுடைய முல்லைநிலத்தாற் சூழப்பட்ட நறிய மருதநிலத்திற்கு இன்பத்தைத் தன்னிடத்தே கொண்ட கற்பகச் சோலைக்குத் தலைவனாகிய விந்திரன் அதிதேவதையாக விருக்குந் தன்மையானது தனது செல்வத்தையு மரசையுங் கவர்ந்த அவுணர்களை வருத்தி அவைகளை மீளத் தனக்குக் கொடுத்து நட்பைக் கைக்கொண்ட உபேந்திரனாகிய மாயோன் பக்கத்தினின்றுந் தானீங்காமை போலாம்.

(வி - ம்.) தெவ்விய - கைக்கொண்ட; "தெவ்வுக் கொளற் பொருட்டே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. இளவல் - பின்னோன்ஈண்டு உபேந்திரனாகிய மாயோனை யுணர்த்தி நின்றது; நவ்வி - மான்; புனற்சூழல் - மருதநிலம்; வண்ணம் - தன்மை; 'வண்ணமேர் சந்தம் பண்பாமென்னு நிகண்டா னறிக. இனித் தெவ்விய என்பதற்குப் பகைத்தவெனப் பொருள் கொள்வாரு முளர்.

(74)

 அறாப்புனற் கால்க ளோடை யகனதி மணிக்காழ் பூண்டு
 சுறாப்பயி லிலஞ்சி பொய்கை தொகுபணை யிலைப்பூண் டாங்கி
 நறாப்பொழிற் பொதும்பர் நந்தா வனவுடை நலக்கச் சூழ்ந்து
 மறாப்பகை கடக்கு நொச்சி வளைசெறித் தன்றச் சூழல்.

(இ - ள்.) அம் மருதநிலமானது நீரறாத வாய்க்கால்களும் நீர்நிலையும் விரிந்த ஆறுகளுமாகிய பலமணிகள் கோத்த மேகலையை யணிந்து சுறாமீன்கள் பயிலுகின்ற வாவிகளும், மானிடராக்காத நீர்நிலைகளும், தொகப்பெற்ற வயல்களுமாகிய இலைச்செறிவு பொருந்திய பூணினை யணிந்து தேனோடுகூடிய காக்களோடு சோலையு நந்தவனமுமாகிய ஆடையை அழகுண்டாகச் சுற்றி மறுக்கக்கூடாத பகைவர்களை வெல்லும் மதிலாகிய வீரவளையையும் செறித்ததென்க.

(வி - ம்.) புனலறாக்கால்க ளெனமாற்றுக; காழ் - சரம், ஈண்டு மேகலையை யுணர்த்திற்று; இதனைப் பல்காசு நிரைத்தசில் காழல்குல்' என்னும் முருகு அடியானுணர்க. இலஞ்சி - மடு; "களிறுமாய்க்குங் கதிர்க்கழனி, யொளிறிலஞ்சி யடை நிவந்த" என்னு மதுரைக்காஞ்சி (247, 248) யடியுரையா னறிக; பொழில் - கா; பொதும்பர் - இள மரக்கா; நொச்சி - மதில்; வளை -வீரவளை இஃதுருவகவணி.

(75)

 பூஞ்சினை வஞ்சி பாங்கர்ப் புனைந்ததற் கேற்பப் பைத்தூர்
 ஆஞ்சிறை யடமேற் செல்லு மவையதன் றொழின்முற் றாமை
 காஞ்சிவேய்ந் ததற்கங் கேற்பக் கடிமரு தினத்திற் சிந்துந்
 தீஞ்சுவை நறைநீ ரோடை செறுநதி கால்க ளெங்கும்.

(இ - ள்.) யாண்டும் இனிய சுவையையுடைய தேனாகிய நீரோடு கூடிய நீர்நிலைகளும், வயல்களும், நதிகளும், கால்களுமாகிய விடங்