| எனப் பட்டினத்து அடிகளாராலும் வியந்துரைக்கப்பட்டுள்ளது. (113) | | கண்முகத்து டற்றுமாதர் காமர்சிந்த வேள்சிலைத் | | | திண்முகத்து நாணெனச் செறிந்துநம்மை யேவுறும் | | | வண்ணமுள்ள தீதெனா மகிழ்ந்துநன்று செய்வன | | | தண்ணறாவ ளிக்கருத்தி நீலமோடு தாமரை. |
(இ - ள்.) குவளை மலர்களோடு தாமரை மலர்களானவை தம் கண்களாலும் முகத்தாலும் தன்மை வருத்துகின்ற இளமங்கையர்தம் அழகைக் காமவுணர்வாகச் சிதைக்க மன்மதவேளின் கரும்பு வில்லினது வலிமைபெற்ற முன்னிடத்து நாணாகச் செறிந்து நம்மை அவர்பால் செலுத்துகின்ற தன்மையுள்ளது இவையென மகிழ்வு கொண்டு தம்மிடமுள்ள குளிர்ந்த தேனை வண்டுகட்கு ஊட்டி நன்மையைக் கைம்மாறாகச் செய்யுந் தன்மையனவாம். (வி - ம்.) அத் தடாகத்துப் பூத்துள்ள கருங்குவளை மலர்களிலும் தாமரை மலர்களிலும் நிறைந்துள்ள தேனை வண்டுகள் வந்து குடித்துச் செல்கின்றன. அந்நிலையை இளமங்கையர்கண்ணும் முகமும் தம் அழகினால் வென்று மலர்கட்கு வருத்த முண்டாக்க அம்மலர்கள் வண்டுகளை, மன்மதன் கரும்புவில்லுக்கு நாணாக அமைந்து சென்று அம் மங்கையரை வருத்துமாறு தேனூட்டி விடுப்பதாகக் கற்பித்தார். மலர்களே மன்மதன் தொடுக்கும் அம்பு; அவைகளைக்கொண்டு காதலர்களை மன்மதன் வருத்துவான் என்பது கவிகள் மரபு. ஆகலான், வண்டுகள் நாணாக இருந்து மலர்களை அம்பாகக்கொண்டு அதில் தொடுத்து எய்தற்குத் துணைபுரிந்தமையால் தம் பகையை முடிக்க உதவி செய்தமையால் அந்நன்றிக்குக் கைம்மாறாக அவை தேனினை அவைகட்கு ஊட்டுவதாகக் கற்பனைசெய்து கூறினார். இத்துடன் முன்னைப்பாட்டும் இவ்வணியே. மன்மதனுக்கு வில், கரும்பு; நாண் (கயிறு) வண்டுகள்; அம்பு, தாமரை, குவளை, மா, முல்லை, அசோக மலர்கள்; இவைகளை வண்டுகளாகிய நாணிலேற்றி மன்மதன் இம்மலர் எய்வோனாவன். அந் நன்றியை நினைவுகூர்ந்த குவளை தாமரைகள் தம் அகத்துள்ள தேனினை ஊட்டி விருந்தாற்றுவவாயின. இவ்வாறு கவியின்பம் அமையத் தற்குறிப்பேற்றம் தந்துரைத்தார். (114) | | கொங்குவிம்மு தாமரைக் குலத்தினோடு சங்கினம் | | | தங்குகின்ற பெற்றிவான் றயங்குமாநி தித்துணை | | | அங்கணங்க ணின்றுவேட் டடுத்திறைஞ்சு வோர்க்கெலாம் | | | செங்கையுய்ப்ப வண்ணலார் செறித்தசூழல் போன்றதே. |
(இ - ள்.) தேன் பொங்காநின்ற தாமரை மலரினத்தோடு சங்கினங்கள் உறைகின்ற தன்மை, வானவர் நாட்டிலே விளங்காநின்ற பெருநிதியாகிய பதுமநிதி சங்கநிதியாகிய இரண்டனையும் இத்தலத்திலே அங்கங்கே நின்று நிதிவேட்டு வழிபடும் அன்பர்களுக்கு அவ்வப்போதே அவரவர் கையில் வழங்குதற் பொருட்டு எம்பெருமான் அச்சூழலிலே தொகுத்து வைத்திருத்தலை ஒத்தது. (வி - ம்.) கொங்கு - தேன்; மணமுமாம். துணை - இரண்டு. அங்கணங்கண் - அவ்வவ்விடத்தே. நிதிவேட்டிறைஞ்சுவோர்க்கு என்க. அண்ணலார் - இறைவனார். (115) |