பக்கம் எண் :

454தணிகைப் புராணம்

 கோயி லைக்குறு குற்றனன்
 வாயின் முன்னர் வணங்கினான்
 போய கத்தொளிர் பூரணன்
 தூய பாதந் தொழுதனன்

(இ - ள்.) பின்னர்த் திருக்கோயிலை எய்தித் திருவாயிலின்முன்னர் நின்று வணங்கி உட்புகுந்து ஆண்டு வீற்றிருக்கும் மெய்யடியார் உளத்தே ஒளிருகின்ற முழுமுதலின் தூய திருவடிகளைத் தொழுதான்.

(வி - ம்.) குறுகுற்றனன், ஒருசொல். வணங்கினான், முற்றெச்சம். பூரணன் - முழுமுதல்வன்.

(119)

 ஆண்டு வேண்டு மரும்பொருள்
 காண்ட கக்கதிப் பித்தனன்
 மூண்ட வன்பு முகிழ்த்தெழப்
 பூண்டு பூசை புரிந்தனன்.

(இ - ள்.) அவ்விடத்து வேண்டற்பாலனவாகிய அரிய வழிபாட்டுப் பொருள்களை எல்லாம் நெஞ்சகத்தே தோற்றுவித்துக் கொண்டவனாய் இயல்பாகவே தன்னகத்தே தோன்றிய அன்புபெருகி எழாநிற்ப வழிபாட்டை மேற்கொண்டு இயற்றினன்.

(வி - ம்.) மனத்திலே தோற்றுவித்துக் கொண்டென்பது தோன்றக் கதிப்பித்தனன் என்றார். பூசைபூண்டு - என மாறுக.

(120)

 ஐந்து சுத்தி யமைத்தருள
 ஐந்தொ ழிற்படு மர்ச்சனை
 ஐந்த டக்கி யமைத்தபின்
 ஐந்தி னாந்துதி யார்த்தினான்.

(இ - ள்.) பூதசுத்தி முதலிய ஐவகைச் சுத்திகளையும் செய்து கொண்டு வழங்கும் ஐவகை உபசாரத்தொழிலும் நிகழ்தற்கிடமான வழிபாட்டினை மனம் பொறிகளின்பாற் செல்லாமற் றடுத்து இறைவன் திருவடியிலேயே அதனை நிறுத்திச் செய்தபின்னர்த் திருவைந்தெழுத்தாலாகிய வாழ்த்தினை ஓதினன்.

(வி - ம்.) ஐந்து சுத்தியாவன - பூதசுத்தி, தானசுத்தி, திரவிய சுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்பன. அருள் அர்ச்சனை ஐந்தொழிற்படு அர்ச்சனை எனத் தனித்தனி கூட்டுக. ஐந்தொழில் - ஐம்பெரும் பூதங்கள் சம்பந்தமான பொருள்களாற் றனித்தனி உபசரித்தல். இவை பார்த்திவோபசாரம், ஆப்பியோபசாரம், வைசசசோபசாரம், வாய்வோபசாரம், வைகாயசோபசாரம் என்று கூறப்படும்.

(121)

வேறு

 ஒருபாலின் மலைமடந்தை யொழியாமை வீற்றிருந்தும்
 இருபாலு மிருடியர்க ளிறைஞ்சேத்துந் தனிமுதலே