| | தருவானத் திறையவனுஞ் சதுமறைநான் முகத்தவனும் | | | திருமாலு மறியாநின் றிருவடியென் சிரத்தினவே. |
(இ - ள்.) ஒருபகுதியிலே மலையரையன் மகளார் எஞ்ஞான்றும் பிரியாதே இருக்கவும், இரு பக்கத்தும் வந்து நெருங்கித் துறவோர் வணங்கி வாழ்த்துதற்குக் காரணமான ஒப்பற்ற முதல்வனே! கற்பகப் பொழிலையுடைய வானுலகத்து இறைவனாகிய இந்திரனும் நான்குமறைகளை யுணர்ந்த பிரமனும் திருமாலும் காணமாட்டாதனவாகிய நின்திருவடிகள் என்புன்றலைமேற் கொள்ளப்பட்டன. (வி - ம்.) இல்லறத்தாரைத் துறவறத்தார் வழிபடுதல் மரபன்றா யிருந்தும் மலைமகளோடிருக்கு நின்னை இருடியர் இறைஞ்சுவது இறும்பூ தென்று வியந்தவாறு. (122) | | புவியிருந்தேர்த் தவிசனைய பொருப்புநெடுஞ் சிலைகுழைத்தும் | | | குவிமுலைசற் றேபொருதக் குழைந்தருளும் பெருந்தகையே | | | சவிமணிநூ புரத்தொலியுந் தழங்கியகைப் பறையொலியும் | | | அவிர்சடைநீர் முழக்கொலியு மடங்கலுமென் செவியனவே. |
(இ - ள்.) பூமியாகிய நினது தேரின் இருக்கைபோன்ற இமயமென்னும் நெடியமலையை வளைத்த பேராற்றலுடையையா யிருந்தும், எம்பிராட்டியின் குவிந்த மென்முலை ஒருசிறிது தாக்கிய அளவிலே பெரிதும் குழைந்தருளிய பெருந்தன்மையுடையோனே ! ஒளிமணி பதித்த நினது திருவடிக்கண் அணிந்த நூபுரத்தின் ஒலியும் நினது திருக்கையகத்திருந்து முழங்கிய பறையொலியும் விளங்கும் நினது சடைக்கண் உறையும் கங்கையிலுண்டாகும் முழக்கவொலியும் ஆகிய இவ்வொலிகள் அனைத்தும் எளியேன் புன்செவியிடத்தன காண். (வி - ம்.) இறைவனுக்குப் பூமி தேர் ஆதலின், அப்பூமிமேல் உயர்ந்து நிற்கும் இமயத்தைத் தவிசனைய பொருப்பு என்றார். மலைகுழைத்த நீ முலைபொருதக் குழைவது எமக்கு இறும்பூதாயிற்று என்றவாறு. முலைக்கு நீ குழைதற்குக் காரணம் அன்புக்குருகும் நின்பெருந்தன்மையே என்பார், பெருந்தகையே என்று விளித்தார். சவி - ஒளி. இறைவன் திருவடிகளில் ஒன்று இறைவியுடையதாகலின் நூபுரத்தொலி என்றார். நூபுரம் மகளிர் காலணி, இதனை, | | "வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் | | | தனிச்சிலம் பரற்றுந் தகைமையள்" |
எனவரும் இளங்கோவடிகள் (சி. 23 : 9 - 10) மொழியானும் உணர்க. (123) | | முறைமுழுதும் பகுத்தமைத்து முறைதிறம்ப மூவருக்கும் | | | உறைமலர்வா ணியைத்திருவை யுமையையரு ளறக்கடலே | | | பிறைமுடியு நகைமுகமும் பெருந்தோளும் வரைமார்பும் | | | நிறையுதர பந்தனமு நிலாக்கச்சும் விழியனவே. |
(இ - ள்.) படைப்பு முதலிய தொழின் முறைகளையெல்லாம் நன்கு வகுத்துக் கொடுத்துப் பின்னர் நடுவுநிலை பிறழும்படி பிரமன் |