பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்457

 பெருகிய வுவகை துள்ளப் பிணைபொரு ளன்றே பெற்றாங்
 குருகிய வுளத்த னாடல் பாடல்க ளுஞற்றா
நின்றான்.

(இ - ள்.) உணர்தற்கரிய வேதங்கள்தாமும் ஓர் வரம்பிட்டு இன்றுகாறும் அளந்து காண்டற்கரிய ஒளிப்பிழம்பானவனும் வீராட்ட காசத்திலே எஞ்ஞான்றும் உறையும் வள்ளலுமாகிய எம்பிரான் அவ்வாறு திருவருள் செய்தவுடனே ! மிக்க மகிழ்ச்சி உள்ளத்துள்ளே எழுந்து துள்ளாநிற்றலால் விரும்பிய பொருளினைப் பெற்றாற்போன்று உருகிய நெஞ்சத்தையுடையனாய் ஆடுதலும் பாடுதலும் செய்யா நின்றான்.

(வி - ம்.) சோதியாகிய வள்ளல் என்க. பிணை - விருப்பம்; "பிணையும் பேணும் பெட்பின் பொருள" (தொல். சொல். உரி - 40)

(127 )

 கருணையந் திறத்துத் தாழ்ந்த கருத்தினை யரிது மீட்டுப்
 பொருவில்வீ ராட்ட காசப் புனிதனை வணங்கிப் போந்து
 திருவளர் வராக வைப்பைச் சேர்ந்திருந் தங்கும் பொய்தீர்
 ஒருசிவ லிங்கந் தாபித் துஞற்றினன் வழிபா டெல்லாம்.

(இ - ள்.) இறைவனுடைய கருணைப் பெருக்கின் பெற்றிமை கருதி அத்திறத்தே ஆழ்ந்துவிட்ட தன் கருத்தினை அம்முனிவன் அரிதாக மீட்டுக்கொண்டு ஒப்பற்ற வீராட்டகாசப் பெருமானை மீண்டும் வணங்கி அவணின்றும் போய்ச் செல்வம் வளர்தற்குக் காரணமான வராகப்பதியை அடைந்து அத்திருப்பதியிலே உறைந்து அவ்விடத்தேயும் பிறப்பறுதற்குக் காரணமானதொரு திருவருட்குறியை நிறுவி நூன் முறைப்படி வழிபாடெல்லாம் இயற்றாநின்றான்.

(வி - ம்.) இறைவன் திருக்கருணையை நினைந்து நினைந்து விம்மித முற்று அதன்கண் அழுந்திய கருத்தினை என்றவாறு. வைப்பு - பதி. பொய் - பிறப்பு. தாபித்தல் - நிறுத்துதல்.

(128)

 நித்தலு நதியிற் றோய்ந்து நிறைசிவ கங்கை யாடிப்
 பத்தியிற் சாமி நாதன் பாதபங் கயங்கள் போற்றி
 அத்தன்வீ ராட்ட காசத் தடிகள்பூ சனையுஞ் செய்தான்
 உத்தமன் வரைந்த வாண்டு மின்னண மொழித லோடும்.

(இ - ள்.) நாடொறும் யாற்றிலே நீராடிப் பின்னர் கடவுட்டன்மை நிறைந்த சிவகங்கையினும் நீராடித் தலையாய அன்போடு முருகப்பெருமானுடைய திருவடித்தாமரைகளை வணங்கிப் பின்னர்த் தலைவனாகிய வீராட்டகாசப் பெருமானடிகளையும் வழிபாடு செய்துவந்தான். அவ்விறைவன் குறிப்பிட்ட ஓராண்டும் இவ்வாறே கழிந்தது, பின்னர்.

(வி - ம்.) நித்தலும் - நாடோறும். நீர்நிறை - சிவகங்கையுமாம். சாமிநாதன் - முருகப்பெருமான். உத்தமன் - இறைவன்.

(129)

 வழிவரு நாளு முன்போல் வராகமா புரத்துத் தேவைத்
 தொழுதுவீ ராட்ட காசத் தோன்றலைச் சாமி நாத