| | நக்கலர் கமல பாத நாடுபு திளைக்குங் கண்ணன் | | | மிக்கவி பொறிய னாகி விழுப்பொரு ளெதிரே தாழ்ந்தான். |
(இ - ள்.) அங்ஙனம் செல்லாநின்ற முனிவன் முருகப்பெருமான் திருமந்திரமாகிய ஆறு எழுத்துக்களையும் விடாது கணிக்கும் வாயினையுடையனாய், தலையின்மேலெழுந்து சேர்ந்த கைகளையுடையனாய், நெஞ்சத்தின்கண்ணே விம்மி எழாநின்ற உழுவலன்புடையனாய் இறைவனுடைய சிரித்து மலர்ந்த செந்தாமரை போன்ற திருவடிகளைநாடி அவற்றின்பால் அழுந்திய கண்களையுடையனாய்ப் பெரிதும் அவித்த பொறிகளையுடையனாய்ச் சிறந்த மெய்ப்பொருளாகிய முருகன் திருமுன்னர் வீழ்ந்து வணங்கினான். (வி - ம்.) புக்கனன் : வினையாலணையும் பெயர். ஆறெழுத்து - "சரவணபவ ;" "குமாராய நம" என்பதுமாம். துற்றெழுதல் - செறிந்தெழுதல், ஈண்டு விம்முதல்மேனின்றது. உழுவலன்பு பிறவிதோறும் தொடர்ந்தடிப்பட்டு வந்த அன்பு. அவிபொறி : வினைத்தொகை. விழுப்பொருள் - செம்பொருள் ; முருகப்பெருமான். (133) | | புளகமெய் யரும்பிப் போர்ப்பப் பொங்குநீர் வழிகள் கால | | | இளகிய வுளத்தி னோடு மெழுந்தருந் துதிக ளார்த்தி | | | அளவிடற் கரிய வைவே லடிகளைப் பூசை யாற்றி | | | வளமலி யுணவு விட்டு வருந்துயி லிரவு நீத்தான். |
(இ - ள்.) உடலின்கண் மயிர்பொடித்துப் போர்ப்பவும், விழிகள் இன்பக் கண்ணீரைப் பொழியவும், நெகிழ்ந்த நெஞ்சத்தோடும் எழுந்திருந்து அரியபல வாழ்த்துப் பாடல்களை ஓதி அளவைகளான் அளத்தற் கியலாதவனும் கூர்த்த வேற்படையை உடையவனும் ஆகிய முருகப் பெருமானை வழிபாடுசெய்து சுவைமிக்க உணவினையும் உண்ணாது விட்டு இயல்பாகவே வருகின்ற உறக்கத்தினையும் அவ்விராப்பொழுதில் அகற்றி இருந்தனன். (வி - ம்.) வை - கூர்மை. வேலடிகள் - முருகப்பெருமான். வளம் - சுவைமேனின்றது. இயல்பாகவே வருந்துயிலென்க. (134) | | வைகறை யெழுந்து தூநீர் மனுமுறை யினிது தோய்ந்து | | | செய்கடன் முடித்த பின்னர்த் திருநந்தி குகையுங் கண்டு | | | நைகர மில்லா வன்பி னாதனைப் பணிந்து போற்றிப் | | | பெய்கழ னிருதி திக்கிற் பிறங்கவோர் தீர்த்தஞ் செய்தான். |
(இ - ள்.) அவ்விரவு விடியும் வைகறைப் பொழுதிலேயே சென்று தூய நீரின்கண் நூன்முறைப்படி இனிதே ஆடி ஆண்டுச் செய்யக் கடவன எல்லாம் செய்து முடித்த பின்னர் திருநந்தி குகையினையும் கண்டு வணங்கிப் பின்னர்ப் பழுதிலாத அன்பினோடு முதல்வனாகிய முருகப்பெருமானை வணங்கி வாழ்த்திப் பின்னர் அத்திருமலையின் கழல் கட்டிய நிருதிக்குரிய திசையிலே விளங்கும்படி ஒரு தீர்த்தத்தினையும் உண்டாக்கினன். |