| வலிமையினையும் கொண்ட மயிலின் முதுகிடத்தே ஏறி ஊர்ந்து குழலும் யாழும் தேவதுந்துமியும் ஆகிய இசைக்கருவிகளின் இசைகள் எழுந்து ஆரவாரியாநிற்பவும் சுற்றமும் கணமும் சூழ்ந்து வாராநிற்பவும் அகத்தியமுனிவன் தவத்திற் பொருந்தியிருந்த அவ்விடத்தே எழுந்தருளினான். (வி - ம்.) வளைவும் வகிரும் என உம்மை விரிக்க. வகிர் - பிளவு. சூட்டு - கொண்டை. கண் - புள்ளி. சமர்விளைபூட்கை என மாறினுமாம். பூட்கை - வலிமை, நரம்பு : யாழ்க்கு ஆகுபெயர். (138) | | கண்டெழுந் தாடிப் பாடிக் கழலிணைப் போதின் வீழ்ந்து | | | மண்டனிற் புரண்டு சூழ்ந்து மறைபல வெடுத்துப் போற்றும் | | | தொண்டனை மகிழ்ந்து நோக்கித் தோகையை யடுப்ப வுந்தி | | | ஒண்டளிர்க் கரத்தா லன்னா னுடலந்தை வந்து கூறும். |
(இ - ள்.) அப்பெருமான் தனது வருகையைக் கண்டமையாலே அளவிலா மகிழ்ச்சிகொண்டு கூத்தாடியும் பாடியும் வீரக்கழல் கட்டிய தன் திருவடி மலரிலே வீழ்ந்து வணங்கியும் நிலத்திலே புரண்டும் வலமாக வந்தும் மறைபல மொழிந்தும் வாழ்த்தாநின்ற மெய்யடியவனாகிய அம்முனிவனை மகிழ்ந்துநோக்கித் தன் மயிலூர்தியை அவனை அணுகச் செலுத்தித் தன் ஒள்ளிய தளிர்போன்ற திருக்கைகளானே அவனுடைய உடலைத் தடவிக்கொடுத்து (பின்வருமாறு) திருவாய் மலர்ந்தருளும். (வி - ம்.) தொண்டன் - அடியவன். தோகை - ஆகுபெயர். அடுப்ப - அணுக. உந்தி - செலுத்தி. அன்னான் - அகத்தியன். தை வந்து - தடவி. (139) | | எண்ணில்பல் கோடி யாக்கை யீட்டிய பாவ மெல்லாம் | | | நுண்ணிய திரண மாக நுங்குறுங் காட்டுத் தீயாம் | | | தண்ணிய சோலை சூழ்ந்த தணிகையித் தலத்தை நீசெய் | | | புண்ணிய மிகுதி யாற்றாற் போந்தனை புலவ ரேறே. |
(இ - ள்.) நல்லிசைப் புலவர்களுள் ஏறுபோன்றவனே ! குளிர்ந்த பொழிலாற் சூழப்பட்ட இத்தணிகைத் திருத்தலம். உயிர்கள் எண்ணிறந்த பிறவிகளிலே பிறந்து ஈட்டிக்கொண்ட தீவினைகள் அனைத்தும் சிறியதொரு துரும்பாகக்கொண்டு அழித்தொழிக்குமொரு காட்டுத் தீயேயாகும் என்றறிக ! இத்தகைய மாண்புடைய இத்தலத்தினை நீ எண்ணிலாத பிறவிகளிலே செய்த மிக்கபுண்ணியமே வழியாக வந்தெய்தாநின்றனை. (வி - ம்.) யாக்கைகொண் டீட்டிய என்க. திரணம் - துரும்பு. தணிகை பாவமாகிய துரும்பை நுங்கும் காட்டுத்தீ என்க. புண்ணியம் மேல்நோக்குவிக்குமாதலின் நீ செய்த புண்ணியமே நின்னை ஈண்டுச் சேர்த்த தென்பான் புண்ணிய ஆற்றால் போந்தனை என்றான். (140) | | மாதவ மிகுதி யில்லா மாண்பினர்க் கீண்டைச் சேர்வும் | | | தீதறு குமார தீர்த்தஞ் சிவகங்கை நதியிற் றோய்வும் |
|