பக்கம் எண் :

462தணிகைப் புராணம்

 கோதில்வீ ராட்ட காசக் குமாரலிங் கத்தி னோடும்
 போதக முகத்தி னாவச் சகாயனைப் போற்றும் பேறும்.

(இ - ள்.) பெரிய தவத்தினைப் பெரிதும் இயற்றியிலாத தன்மை யினையுடைய எளியவர்க்கு இத்தணிகைத் தலத்தை அடைதலும், பிறவி யறுதற்குக் காரணமான குமாரதீர்த்தத்தும் சிவகங்கையாகிய அவ்வியாற்றினும் ஆடுதலும் குற்றமற்ற திருவீராட்டகாசத் தெழுந்தருளியுள்ள குமாரலிங்கப் பெருமானையும் ஆனைமுகத்தினையுடைய ஆவச்சகாயப் பெருமானையும் வணங்கும் பேறும்.

(வி - ம்.) மாண்பினர் என்புழி, மாண்பு, இயல்பு என்னு மாத்திரை. இனி இகழ்ச்சிக் குறிப்பெனினுமாம். போதகமுகம் - யானை முகம்.

(141)

 இத்தலந் தன்னிற் றோற்ற மிருக்கையந் திக்கும் பேறும்
 மெய்த்தவ நந்திச் சூழல் விழியெதிர் காணும் பேறும்
 உத்தம முனிவ வெய்தா வோங்குமித் தலத்திற் போந்த
 அத்தகு போதே நின்பான் மங்கல மனைத்துஞ் சார்ந்த.

(இ - ள்.) மேலும் இத்தணிகைத் தலத்திலே பிறத்தலும், ஈண்டிருந்து வாழ்தலும், ஈண்டே இறத்தலும் ஆகிய பேறுகளும், மெய்யாய தவத்தை யுடையோனே ! திருநந்திப் பொழிலைத் தங்கண்களாலே காணும் பேறும் எய்தமாட்டாவாம். சிறந்த முனிவனே ! நீ உயர்ந்த இத் திருத்தலத்திற் புகுந்த அந்தத் தகுதியடைந்த பொழுதிலேயே நின்னிடத்தே ஆக்கங்கள் அனைத்தும் ஒருசேர வந்தெய்தின காண்.

(வி - ம்.) தோற்றம் - பிறத்தல். அந்தித்தல் - இறத்தல். மெய்த்தவஞ் செய்தற்கேற்ற நந்திச் சூழல் எனினுமாம். விழிபெறும் பேறஃதே என்பான் விழியெதிர் என்று விதந்தான். உத்தம முனிவனாகலின் நினக்கிப் பேறு கிடைத்ததென்பான் அங்ஙனம் விளித்தான். மங்கலம் - ஆக்கம்.

(142)

 ஈட்டிய தவத்தாற் சால வெய்த்தனை யாக்கை முற்றும்
 வேட்டதெ னுவறி யென்றான் மீட்டும்வந் தனைகள் செய்து
 கோட்டிய மெய்யி னோடுங் குடங்கைவாய் புதைத்துக் கட்டித்
 தீட்டிய புகழ்சால் வேதத் திருமுனி யிதனைச் சொற்றான்.

(இ - ள்.) முனிவனே ! நீ செய்த தவமுயற்சியாலே மிகவும் உடல் முழுதும் மெலிந்து போயினை. நன்று நீதான் விரும்பியதியாது? அதனைக் கூறிக்காண் ! என்று அருள்செய்தனன். அதுகேட்டவுடன் நிலைநிறுத்தப்பட்ட மிக்க புகழையும் வேதமாகிய செல்வத்தையும் உடைய அவ் வகத்தியமுனிவன் மீண்டும் வழிபாடுகள் பல வியற்றி வணங்கிய உடலோடும் அங்கையாலே வாய்பொத்திக் கைகட்டி நின்று (பின்வரும்) இதனைக் கூறாநின்றான்.

(வி - ம்.) சால - மிக. எய்த்தல் - மெலிதல். யாக்கைமுற்றும் எய்த்தனை எனமாறுக. கோட்டிய - வளைத்த. குடங்கை - உள்ளங்கை. சொற்றான் -
சொன்னான்.

(143)