| வேறு | | மேதகு மறமா யறமற மாக விளைப்பதாய்ப் பசுபதி பாசம் | | | கோதற வறிந்து சிவத்தினை யடையக் குறுகிய நெறியதாய்ப் பயிலும் | | | ஆதர வுடன்வே தாகம வழியா லமலனா ரடிவழி பாடு | | | தீதற வுஞற்றல் பரமமாந் தருமஞ் சிவனுரை வேதமா கமங்கள். |
(இ - ள்.) இறைவன், உயிர், கட்டு என்னும் முப்பொருள்களின் இயல்பையும் குற்றமற உணர்ந்துகொண்டு அவனை அடைய முயல்வோர்க்கு அண்ணிதாகிய வழியாகவும், அறங்களுள் வைத்துத் தலை சிறந்த அறந்தானேயாகவும், ஏனைய அறங்கள் அனைத்தும் மெய்யறமாகும்படி செய்வதாகவும் அமைந்த பிறவிதோறும் பயின்றடிப்பட்டு வரும் உழுவலன்புடனே வேதமும் ஆகமமும் கூறிய நெறியானே வாலறிவனாகிய இறைவன் திருவடிகளைக் குற்றமற வழிபாடு செய்தல் மேலான அறமாகும். அவ்வேதங்களும் ஆகமங்களும் இறைவனுரையேயாம். (வி - ம்.) சிவத்தினையடையக் குறுகிய நெறியதாய் (தானே) மேதகும் அறமாய் (ஏனைய) அறங்களை மெய்யறமாக்குவதாய் அமைந்த ஆதரவு, பயிலும் ஆதரவு எனத் தனித்தனி கூட்டுக. பண்டும் பண்டும் பிறவிதோறும் பயின்றடிப்பட்டு வரும் அன்பென்பார். பயிலும் ஆதரவு என்றார். ஆதரவு - ஈண்டு இறைவன்பாற் செல்லும் மெய்யன்பு. அவ்வன்பில்வழி வழிபாட்டால் யாதும் பயனில்லை என்பார் அன்பினை இங்ஙனம் விதந்து ஓதினர். | | "அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி | | | அன்பே யன்பாக அறிவழியும் - அன்பன்றித் | | | தீர்த்தந் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை | | | சாற்றும் பழமன்றே தான்" (திருக்களிற் - 55.) |
என்றெழுந்த திருமொழியுங் காண்க. இறைவ வழிபாடு, வேதம் ஆகமங்களிற் கூறிய முறைப்படியும் ஆதரவுடனும் இயற்றுவதே மேலான அறம் எனக் கொள்க : பரமதருமமாம் என மாறுக. பரமதருமம் - உயர்ந்த அறம். வேத மாகமங்கள் : உம்மைத்தொகை. வேதங்களும் ஆகமங்களும் சிவனுரையே யெனவும், அவை கூறுமுறை இதுவெனவும் பொருள் கொள்க. (149) | | பிரணவ முதலாய்ச் சிவாயவென் பதுபின் | | | பிணைந்துறக் கிளக்குமா றெழுத்தும் | | | விரவுமந் நூலி னெவ்வகை மனுக்கு | | | மேலதா மவைதரு பொருள்கள் | | | பரனொடு பஞ்ச சத்திக ளிரண்டு | | | பயனுமாம் பயின்றவர்க் காதி | | | மருவிய பதத்தின் வித்தினா லென்ன | | | மறைமுத லனைத்துந்தோன் றினவால். |
|