| | தருபய னுளதோர் நூலிலே முன்னைத் | | | தவத்தினாற் பயிலுநர் சிலரே | | | துரிசுறு புறநூல் பயிலுநர் பலரே | | | சூழ்ந்திடு மிருண்மலச் செருக்கால். |
(இ - ள்.) குற்றமற்ற தானம் முதலிய அறங்களை யுணர்த்தி விரும்புதற்குக் காரணமான மெய்யின்ப நுகர்ச்சியையும், உயிர் இறைகட்டு என்னும் முப்பொருள்களின் இயல்பையும் ஐயந்திரிபற உணர்த்திக் குற்றமற்ற வீட்டுலகத்தினுங் குடியேற்றுஞ் சிறப்புடைய இறைவன் நூலை ஒத்த பயன்தரும் நூல் பிறிதொன்றில்லை. இத்தகைய நூலை முற்பிறப்பிற் றவஞ்செய்துயர்ந்த ஒருசிலரே பயில்பவராவார். ஏனையோர் தம்மைப் பொதிந்துள்ள மலச் செருக்குண்மையால் மயக்கந்தரும் பிற நூல்களையே விரும்பிப் பயிலாநிற்பர். (வி - ம்.) கரிசு - குற்றம்; அஃதாவது மனமாசு. தானம் - சிவ ஞானச் செயலுடையோர்க்கீதல். போகம் - இம்மை மறுமை வீடு என்னும் மூவிடத்தும் உளவாகிய இன்ப நுகர்ச்சிகள். மும்மைப் பொருள் - உயிர், இறை, கட்டு என்பன. போக்கு - குற்றம். "புறச் சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகல்மிருதி வழியுழன்றும் புகலும் ஆச்சிரம, அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் . . . . . . . . சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப் பொருளை மிகத்தெளிந்து சென்றால் சைவத், திறத்தடைவர்" என்பது பற்றி முன்னைத் தவத்தினாற் சிலரே பயில்வர் என்றார். துரிசு - மயக்கம். புறநூல் - புறச்சமய நூல் முதலியன. இருண்மலம் - ஆணவமலம். (154) | | வார்சடைக் கடவுள் வாக்கிய மினைத்தால் | | | வழிபடற் குரிப்பொருள் கேட்டி | | | ஆர்திரைப் புணரி கடைந்தஞான் றெழுங்கோ | | | வைந்தினும் பயமுத லாறும் | | | சீர்தக வுதித்த வவற்றினுண் மயத்திற் | | | சீறிலை வில்வமுன் னாய | | | தேர்திகழ் கமலை விழைந்திருத் தலினாற் | | | சீபல மெனப்பெயர் விளங்கும். |
(இ - ள்.) நெடிய சடையினையுடைய இறைவன் மொழியாகிய இதனால் இறைவனை வழிபாடு செய்தற்குரிய பொருள்களை இனிக் கூறுவேன் கேட்பாயாக ! (பண்டு) முழங்காநின்ற அலைகளையுடைய திருப்பாற் கடலைக் கடைந்தபொழுது அதன்கணின்றும் தோன்றிய கடவுள் ஆன்களிடத்தே பால் முதலிய ஆன்பயன்கள் ஆறும் தோன்றின. புகழத்தக்க அவ்வாறனுள் வைத்துக் (கோமயத்தில்) சாணகத்தில் சிறிய இலையையுடைய வில்வம் முன்னர்த் தோன்றியது. அழகு விளங்காநின்ற திருமகள் அதன்கண் விரும்பி வீற்றிருத்தலாலே அது "சீபலம்" என்னும் பெயரோடு திகழ்வதாயிற்று. (வி - ம்.) வார்சடைக் கடவுள் - சிவபெருமான். உரிப்பொருள் - உரிய பொருள். கேட்டி - கேட்பாயாக. புணரி - கடல்; திருப்பாற் |