| கடல். திருப்பாற் கடலினின்றும் தோன்றிய கடவுள் ஆன்கள் : நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்பனவாம். ஆப்பயன் ஆறாவன : பால், தயிர், வெண்ணெய், சாணகம், நீர், உரோசனை (கோரோசனை) என்பன. மயம் - சாணகம். சீபலம் - வில்வம் (காரணப்பெயர்). (155) | | கமலவுற் பலமும் பின்பதி னெழுந்த | | | கமழ்ந்தகுங் குலியநீ ருயிர்த்த | | | தமிழ்துறழ் பாலிற் கதிரொடுஞ் செந்நெ | | | லாயது சந்தன மாதி | | | இமிழுமங் கலத்த பொருளெலாந் ததியி | | | னீண்டிய வீன்றதால் வெண்ணெய் | | | உமிழ்சுவை யமிழ்த முரோசனை யீன்ற | | | துளத்துறு சித்திபே தங்கள் |
(இ - ள்.) அவ் வில்வத்தின் பின்னாக அச்சாணகத்தினின்றே தாமரையும் நீரோற்பலமும் தோன்றின. நீர் (கோசலம்) நறுமணங்கமழும் குங்குலியத்தை நல்கிற்று, அமிழ்தம் போன்ற பாலினின்றும் கதிரோடும் கூடிய சிவந்த நெல் தோன்றிற்று. தயிரினின்றும் சந்தன முதலிய மணங்கமழு மங்கலப் பொருள்கள் தோன்றலாயின. வெண்ணெய் சுவைதரும் அமிழ்தத்தை ஈன்றது. உரோசனை, உள்ளத்தே நிகழும் எண்வகைச் சித்திகளையும் ஈன்றது. (வி - ம்.) கமலவுற்பலம் - உம்மைத்தொகை. கமலம் - தாமரை. உற்பலம் - நீலமலர். நீர் - கோமூத்திரம். இமிழ்தல் - வீசுதல். ததி - தயிர். வெண்ணெய் - அமிழ்தம் ஈன்றது எனமாறுக. ஆல் - அசை. சித்தி - அணிமா முதலியன. (156) | | ஆதலா லானி னாறுமவ் வாறு | | | மருளிய பொருள்களுந் தழுவிச் | | | சோதிநிட் களமாய் நின்றிடி னுயிரின் | | | றுரிசறா தெனக்கரு ணையினால் | | | மாதர்சேர் சகள வடிவுகொண் டிருந்த | | | வரதனை வழிபடப் பெற்றோர் | | | கோதுறு வினைகண் முழுவதுந் துமித்துக் | | | குறுகுவர் சிவபுரத் தவன்பால். |
(இ - ள்.) இங்ஙனமாகலின் சிறந்த அவ்வாப்பயன் ஆறும் அவை நல்கிய வில்வ முதலிய பொருள்களும் இறைவழிபாட்டிற்குச் சிறந்தன. இவையிற்றைக்கொண்டு, தனக்கியல்பான அறிவாகிய அருவநிலையிலேயே தான் அமைந்துவிடின் உயிர்களைப் பற்றியுள்ள மலமறாது எனக் கருதித் தனக்கியல்பான பேரருளுடைமை காரணமாக அம்மையப்பனாந் திருவுருக் கொண்டிருந்த வரதனாகிய விரிசடைக் கடவுளை ஆகமவழியாலே வழிபாடு செய்வோர் பிறப்புறுதற்குக் காரணமான இருவினை |