| யையுங் கெடுத்து சிவபுரத்திலே அவ்விறைவன் திருவடிநீழலிலே எய்தி இன்புறாநிற்பர். (வி - ம்.) சோதி - அறிவாகிய ஒளி. நிட்களம் - உருவமற்றது; அருவம். உயிரின் துரிசு - ஆணவமலம். கருணை - பேரருள். மாதர் - இறைவி. மாதர் சேர் - அழகு சேர்ந்த; எனப் பொருள் கொள்ளினும் இழுக்கின்று. வரதன் - வரந்தருபவன். கோது - பிறப்பு, ஆகுபெயர். அவாவுமாம். அவன் - அவ்வரதன். (157) | | ஈட்டும்பூ சனைசெ யன்பர்த மூவேழ் | | | சுற்றமு மேவல்செய் தவரும் | | | கேட்டவர் மகிழ்ந்தோர் வேட்டவர் முகமன் | | | கிளந்தவர் கண்டவ ரிவரும் | | | பாட்டளி மூசு மலர்முத லளித்த | | | பாதவ முதலிய வுயிரும் | | | சேட்டொளி திளைக்குஞ் சிவபுரம் வாழ்ந்து | | | பிறந்துழிச் செல்வரா யுயர்வார். |
(இ - ள்.) இறையறத்தை ஈட்டுதற்குக் காரணமான இத்தகைய இறைவழிபா டியற்றுவோருடைய இருபத்தொரு தலைமுறைச் சுற்றத் தார்களும், இவ் வழிபாட்டின்பொழுது இவர்க்கேவல் செய்தவரும் இவ் வழிபாட்டுச் சிறப்பைக் கேட்டவரும், கேட்டுழி மகிழ்ந்தவரும், இவரை விரும்பியவரும், இவர்க்குப் பாராட்டுரை மொழிந்தவரும், இவ் வழிபாட்டுவிழவினைக் கண்டு களித்தவரும், வழிபாடியற்றிய இவரும், இசைமுரலும் வண்டுகள் வீழும் மலர் முதலியவற்றை இவ்வழிபாட்டிற் குதவிய மரமுதலிய உயிர்களும் பேரொளி தவழும் சிவபுரத்திலே சேணெடுங்காலம் இன்புற்றமர்ந்திருந்து பின்னர்ப் பிறவியிலுறும் பொழுதும் கருவிலே திருவுடையராய்ப் பிறந்து மேலும் சிவநெறிக்கட்சென்று உயர்வர். (வி - ம்.) அறமீட்டும் பூசனை என்க. மூவேழ் சுற்றம் என்றது அவர்தம் பிதிரர்களை. பாதவம் - மரமுதலியன. ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐயறிவுயிர் என்ற பாகுபாடு தோன்ற "பாதவ முதலிய வுயிரும்" என்றார். சேடு - பெருமை. பின்னும் சிவநெறியிலே சென்றுயர்வர் என்க. ஏவல் செய்வோர் என்றது சரியை நெறியி னின்றோரை. வழிபடுவோர் என்றது கிரியை நெறியி னிற்போரை என்க. (158) | | இத்தகு பூசை யிறைவனை நாளு | | | மியற்றியோ கத்தினும் பணியும் | | | உத்தம குணத்தார்க் குணர்வெழு நீக்க | | | முண்மைகண் டொளிர்சிவ ஞானம் | | | கைத்தலக் கனிபோற் கொடுக்குமா ரியனுங் | | | கசிந்துநின் றேற்பவர் தாமும் |
|