| | மேதகு ஞானந் தங்குலத் தளிக்கு மெய்த்தவ னில்லெனி லடுத்த | | | சாதியி னமைந்த குரவர்பாற் கேட்ட றகும்பிற கேட்பது தகாதால் | | | மாதவ ஞான மருண்முறை கிளந்தா மாசறு ஞானநூ றன்னைத் | | | தீதறு பூசை யுஞற்றுநர் கொடுக்குந் திறமினிச் செப்புதுந் தெளிதி. |
(இ - ள்.) தங்குலத்திலே தோன்றிய நல்லாசிரியனைக் காணப் பெறாதவழி மேலான ஞான நூலைத் தங்குலத்திற் கடுத்தகுலத்திற் றோன்றிய நல்லாசிரியர்பாற் கேட்டல் தகுவதாம். ஏனைய குலத்திற் றோன்றிய ஆசிரியர்பாற் கேட்டல் தகாதாம். பெரிய தவத்தையுடைய அகத்தியனே ! இதுகாறும் ஞானநூல் ஓதுவிக்கும் (ஓதும்) முறை கூறினாம். இனிக் குற்றமற்ற ஞானநூலுக்கு வழிபாடு செய்பவர் திறமும் நூல் வழங்கும் முறையும் கூறுவேம். கேட்டுத் தெளிந்து கொள்க. (வி - ம்.) சரியை கிரியை யோகம் என்னும் மூன்று நெறிகளினும் சிறந்து உயர்வற உயர்ந்து நிற்றலின் மேதகுஞானம் என்றார். ஆசிரியன் கற்றுணர்ந்ததனோடு பொறியடக்கமும் உடையவன் ஆதல் வேண்டும் என்பார். ஆசிரியன் என்னாது "மெய்த்தவன்" என்றார். அடுத்த சாதி என்பது, அந்தணர் குலத்தில் குரவர் இலரெனில் அரசர் குலத்திலுள்ள குரவர்பாற் கேட்டல் தகும்; அரசர் குலத்தில் உள்ளோர்க்கு வணிகரும், வணிகர் குலத்திலுள்ளோர்க்கு வேளாளரும் தகும் என்பது. பிற என்றது பிறசாதியினர் என்றவாறு. மாதவ : விளி. உஞற்றுநர் திறமும் அவர் கொடுக்குந்திறமும் என்க. (161) வேறு | | பரமனைப் பரஞா னத்தைக் குரவனைப் பணிந்து பின்னர் | | | விரவுமெண் முழத்தி னான்கின் விளங்குமண் டபமொன் றாக்கித் | | | தரளநாற் றூண்க ணாட்டித் தகையொளிப் பட்டான் வேய்ந்து | | | கிரணவொண் மணிபூ வாடி கேழ்கனி கவரி நாற்றி. |
(இ - ள்.) முன்னர் இறைவனையும் மேலான ஞானநூலையும் ஆசிரியனையும் வணங்கிப் பின்னர் எட்டுமுழத்தினாதல் நான்குமுழத்தினாதல் விளங்கா நின்றதொரு மண்டபத்தைச் செய்து அதன்கண் முத்துப் பதித்த நான்கு தூண்களை நாட்டி அழகிய ஒளியுடைய பட்டாலே வேய்ந்து சுடருடைய ஒளி மணிமாலைகளையும் மலர்மாலைகளையும் கண்ணடியையும் நிறமிக்க சாமரைகளையும் நாலவிட்டு. (வி - ம்.) பரமன் - இறைவன். பரஞானம் - ஆகுபெயர்; ஞான நூல். குரவன் - ஆசிரியன். எண்முழத்தினாதல் நான்கு முழத்தினாதல் என்க. தரளத்தூண் நான்கு என்க. தரளம் - முத்து. முத்தழுத்திய தூண் என்றவாறு. தகை - அழகு. கிரணம் - ஒளிச்சுடர். ஆடி - கண்ணாடி. கேழ் - நிறம். (162) | | அம்புயஞ் சுதையா னாப்ப ணணிந்தய லலங்கா ரித்து | | | வம்பலர் பரப்பி மேலால் வானிறப் புதுப்பட் டேய்த்துக் |
|