| (வி - ம்.) அருச்சனை - வழிபாடு. உணவு - ஈண்டு கடவுட்பலியாகிய பாற்சோறு முதலியன. ஆர்த்துதல் - மறைமொழியாலூட்டுதல். சாந்து - சந்தனம். காழ் - வயிரம். குந்துருக்கம் - ஒருவகை மணப்பொருள். குக்குலு - குங்குலியம். தீம்புகை - மணத்தாலினிய புகை. கபிலை - ஒருவகை ஆன். (165) | | சென்னிதா ளிருகன் னங்க டிருமுக வாய்பு யங்கள் | | | என்னுமோ ரெட்டுஞ் சென்னி யிருகர முழந்தா ளைந்து | | | நன்னிலந் தோயத் தாழ்ந்து நயந்தபி னதற்குப் பாங்கர் | | | மன்னுபூங் கோயி லாக்கிக் குரவனை வழிபா டாற்றி. |
(இ - ள்.) தலையும், கால்களிரண்டும் செவியிரண்டும் அழகிய முகவாயும் கைகளிரண்டும் ஆகிய எட்டுறுப்பும், தலையும் கைகளிரண்டும் முழந்தாளிரண்டும், ஆகிய ஐந்துறுப்புக்களும், நல்ல நிலத்திலே தோயும்படி வீழ்ந்து வணங்கிய பின்னர் அதற்குப் பக்கத்தே மணம் நிலைபெற்ற மலரானே ஒரு கோயில் சமைத்து அதன்கண் நல்லாசிரியனை அமர்த்தி வழிபாடு செய்து. (வி - ம்.) முகவாய் - மோவாய். நெற்றி, இரு தாள், இரு கை, இரு தோள், வாய் எட்டுறுப்பென்பர் சிலர். எட்டும் - எட்டுறுப்பும். ஐந்தும் - ஐந்துறுப்பும். நயத்தல் - அன்பாலே விரும்புதல். குரவன் - நல்லாசிரியன். (166) | | இரந்துமா ணாக்க னாசா னீந்திடப் பெற்றுப் பின்னர்ப் | | | பரந்தநூல் காப்பு நீக்கிப் பயின்றவைங் கவிதை யேட்டின் | | | வரிந்துடன் காப்புச் செய்து வயங்குமா ரியன்முன் னானோர் | | | சுரந்தவான் சுவைநா லுண்டி துய்த்தபி னினத்தோ டுண்டு. |
(இ - ள்.) மாணாக்கன் பின்னர் இரந்து நிற்றலாலே அவ்வாசான் ஓதுவிப்ப ஓதி இங்ஙனம் ஓதியபின்னர்ப் பொருள் விரிந்த அந்த மெய்ஞ்ஞான நூலினது திருக்காப்பினை அவிழ்த்துத் தான் கேட்ட ஐந்து செய்யுள்களையும் வெள்ளேட்டின்கண் வரைந்துகொண்டு பின்னர் அந்நூலினைத் திருக்காப்பிட்டு வைத்த பின்னர் ஞானத்தாலே விளங்கா நின்ற அந்நல்லாசிரியனை உள்ளிட்ட குரவரும் பிறரும் சுவை பழுநிய தூய நால்வகை யுணவும் உண்டபின்னர் அம்மாணாக்கன் தன் இனத்தோடு உண்டு. (வி - ம்.) ஈதல், பெறுதல் இரண்டும் நிரலே ஓதுவித்தல், ஓதல் என்பவற்றை உணர்த்தும். பரந்தநூல் - விரிந்த நூல். காப்பு - கட்டு. ஐங்கவிதை என்றது. இறைவன் இறைவி கணபதி முருகன் ஆசிரியன் என்னும் இவ்வைவரையும் வாழ்த்தும் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஐந்துமாம் என்று கொள்க. ஆசிரியனும் இவற்றையே முதன்முதல் ஓதுவிப்பன் என்பதுபட பயின்ற வைங் கவிதை என்றார். நாலுண்டி : உண்பன தின்பன பருகுவன நக்குவன. இனம் - உடன்பயிலும் மாணவர்; உறவினருமாம். (167) | | இரவினும் பலிக ளோம்பி யிணைவிழைச் சொழிக வில்லோன் | | | வரவிரு முழத்திற் பின்னாண் மண்டபம் விளைத்து முன்போல் |
|