| (இ - ள்.) ஆடித்திங்களினும் வைகாசித் திங்களினும் வருகின்ற பூசனை நாள்களிலே ஈண்டுக் கூறியமுறையாலே ஞானநூல் வழிபாடு செய்தோர் முற்கூறிய நற்பயன் அனைத்தும் ஒருங்கே எய்தாநிற்பர். மேலும் ஞானநூல் வரைதற்கு வேண்டிய ஏடும் எழுத்தாணியும் காப்பிடுதற்குக் கயிறும் வழங்கியவரும், ஞான நூல்களைப் பிறர்க்குதவியாக எழுதிவைத்தவரும், அவற்றை ஓதுதலான் உண்டாகும் பெருமையுறும் பொருட்டு ஓதுவாரும் ஓதுவிப்போரும் மிகவும் அந்நூற் பயன்களை ஆராய்பவரும். (வி - ம்.) பூரணை - நிறைமதிநாள். ஏடு - பனையேடு. ஊசி - எழுத்தாணி. பாசம் - காப்புநூல். பீடு - பெருமை. அரும்பயன்களைப் பெரிதும் ஆராய்ந்துணர்வோர் என்க. (173) | | ஆய்ந்தவர்க் கன்னமாதி யளிப்பவர் முதலா னோரும் | | | ஏய்ந்தநற் சுற்றத் தோடுஞ் சிவபுரத் தெல்லை சேர்வார் | | | வீந்திடி னேடு வேறு வரைந்தது வோமஞ் செய்க | | | வாய்ந்தநூல் வழங்க லீதா லயம்புரி மரபுங் கேண்மோ. |
(இ - ள்.) அங்ஙனம் ஞானநூலை ஆராய்ந்து அரும்பொருள் காண்போர்க்கு உண்டி உடை உறையுள் முதலிய வழங்கினோர் முதலியோர் தம் பொருந்திய சுற்றத்தாரோடும் சிவபுரத்தை அடைந்தின்புறா நிற்பர். ஞான நூலின்கண் உள்ள ஏடு பழுதாகிவிடின் அதற்கு மாற்றோடு வரைந்துகொண்டு பழுதுபட்ட அவ்வேட்டினை வேள்வித்தீயில் இடுக. ஆராய்ந்த ஞானநூல் வழங்குமுறை இஃதாம். இனி இறைவனுக்குத் திருக்கோயில் எடுக்கும் முறைமையினையுங் கூறுவாம் கேட்பாயாக. (வி - ம்.) அன்னமாதி என்புழி ஆதி என்றதற்கு உடை உறையுள் பொருள் நன்னிலம் முதலியனவுங் கொள்க. ஏய்ந்த - இயைந்த. ஏடு வீந்திடின் எனமாறுக. அது அவ்வீந்தவேடு. ஓமம் - வேள்வித்தீ. ஆலயம் - திருக்கோயில். மோ - முன்னிலையசை. ஈது + ஆல் =ஈதால். ஆல் : அசை. இது, ஈது என நீண்டது. (174) | | மதிதவழ்கோ புரநிமிரப் புரிசைபுறஞ் | | | சூழ்போக்கி மணிநீர்ப் பொய்கை | | | பொதியவிழ்பூம் பொழிலாக்கி யைவகையா | | | வரணமுறை பொற்பச் செய்து | | | விதிபயினூ றெரிகழக மடைப்பள்ளி | | | முதற்பலவும் விதியி னாக்கிக் | | | கதியருளு மிறைவனம ரிடமாதி | | | வரைகளெனக் காண்க மாதோ. |
(இ - ள்.) திங்கள் மண்டிலம் தவழுமாறு கோபுரங்களை உயர்த்துத் திருக்கோயிலைச் சூழ மதிலெடுத்துத் தெளிந்த நீரையுடைய திருக்குளமும், கட்டவிழும் மலர்களையுடைய பூம்பொழிலும், உண்டாக்கித் |