| திருக்கோயில் அகத்தே பஞ்சப்பிரம சடங்கதேவரை யுள்ளிட்ட ஐவகைப் பரிவார தேவதைகட்கும் இடமுதலியன முறையே பொலிவுறும்படி அமைத்து மேலும் விதிப்படி பயிலுதற்குரிய நூல்களை ஓதும் மண்டபமும், மடைப்பள்ளியும், பிறவும் நூல் கூறியமுறையானே அமைத்து, உயிர்கட்கு வீடளிக்கும் இறைவன், இறைவி எழுந்தருளுதற்குரிய கோயில்களும் மலைபோன்றுயர்ந்த கோபுரங்களோடு எடுத்தல் வேண்டும். (வி - ம்.) மிகவுயர்ந்த கோபுரங்கள் என்பார் மதிதவழ் கோபுரம், என்றார். நிமிர - உயர. புரிசை - மதில். மணிநீர் - நீலமணிபோலு நிறமுடைய தெளிந்தநீர். பொய்கை - திருக்குளம். பொழில் - மலர்க்கா. ஐவகை - ஆவரணம் என்றது ஐந்துவகையான பரிவார தேவதைகளை. அவரை வழிபடுமண்டப முதலியன என்க. ஐவகைப் பரிவார தேவதைகள், பஞ்சப் பிரமசடங்க தேவர் பன்னொருவரும், வித்தியேசுரர் எண்மரும் கணேசுரர் எண்மரும், உலோகபாலர் பதின்மரும், அவர்தம் படைக்கலங்கள் பத்துமாம். படைக்கலங்கள் : வச்சிரம், சத்தி, தண்டம், கட்கம், பாசம், அங்குசம், கதை, சூலம், பதுமம், சக்கரம் என்பனவாம். (175) | | பழனமிரு நிதிநடன மடமாதர் | | | பணைக்கைமத யானை பாய்மா | | | உழலுருளின் மணிநெடுந்தே ரூர்தியணி | | | யிவைபலவு முவந்து நல்கி | | | விழவொடுபூ சனைபெரிதும் விளைக்கவிளைத் | | | தவர்மீட்டும் பிறப்பின் மேவார் | | | குழவிமதி மிலைத்தபிரான் சிவபுரம்வாழ்ந் | | | தவனடிக்கீழ்க் குறுகு வாரால். |
(இ - ள்.) இறைவன் திருக்கோயிற்கு நன்னிலமும் பெரும் பொருளும் கூத்தாடும் விறலியரும் பருத்த கையினையுடைய யானையும் குதிரையும் உருள்கின்ற சக்கரத்தையுடைய அழகிய நெடிய தேரும் இறைவன் எழுந்தருள்தற்குரிய எருது முதலிய ஊர்தி (வாகனம்)களும் அணிகலன்களும் இன்னோரன்ன மனமகிழ்ந்து வழங்கி மேலும் சிறப்பும் பூசனையும் நன்கு நிகழ்த்தும்படி செய்தவர் மீண்டும் பிறவியின்கண் புகுதமாட்டாராய் இளம்பிறை மிலைந்த எம்பிரானுடைய சிவபுரத்திலே எய்திப் பின்னர் அப்பெருமானுடைய திருவடிநீழலாகிய வீடுபேற்றையும் எய்துவர். (வி - ம்.) பழனம் - விளைவயல். முதலிற் கூறியவை யானை குதிரைகள் உயிருடையன எனக்கொள்க. ஊர்தி என்பதன்கண் விடை யானை குதிரை உருவங்களை அடக்கிக் கொள்க. என்னை ? திருக்கோயில்கட்கு யானை குதிரை முதலியனவும் வழங்குதல் உண்மையான். விழவு - நாள்வழிபாட்டின் குறைவுதீரச் செய்யுஞ் சிறப்பு. பூசனை - நாள் வழிபாடு. குழவிமதி - இளம்பிறை. சிவபுரம் - சாலோக முதலிய பதமுத்திகள். அவனடி என்றது பரமுத்தியினை. ஆல் - அசை. (176) |