| | சிவநகர்செய் தபதியரே வலினிருந்தோர் | | | கூலிவினை செய்தோர் பூணி | | | சிவநகரிற் பிறந்தவர்களொழுக்கமுட | | | னுறைந்தவர்நாள் செல்ல மாய்ந்தோர் | | | சிவநகரி னிறப்பமென வெண்ணினர்சென் | | | றிறைஞ்சினர்சிந் தித்தோர் செல்லச் | | | சிவநகர்செல் பவருடனே துணைச்செல்வோர் | | | களுஞ்சிவலோ கத்தைச் சேர்வார். |
(இ - ள்.) சிவன்றிருக்கோயிலியற்றுந் தச்சரும் அவர்க்குக் குற்றேவல் செய்தவரும், ஆண்டுக் கூலித்தொழில் செய்தவரும் சிவன்கோயிற் றிருப்பணி செய்யுங்கால் அப்பணிக்கு உதவிய எருது முதலியனவும் அப்பணியாளர்க்குப் பிறந்த மக்களும், நல்லொழுக்கத்தோடு திருக்கோயிலிலே வதிந்தவர்களும் அகவை முதிர்ந்து ஆண்டே இறந்தவரும் அக்கோயில் எல்லையிலேயே இருந்து இறப்பேம் என விரதம் பூண்ட வரும், நாடொறும் திருக்கோயிற்குச் சென்று வணங்கியவரும் சென்று வழிபடக் கருதினவரும் திருக்கோயிற்குச் செல்வோர்க்குத் துணை சென்றோரும் சிவலோகத்தை எய்தி இன்புற்றிருப்பர். (வி - ம்.) தபதியர் - தச்சர். ஏவலின் இருந்தோர் - அத்தச்சர்க்குக் குற்றேவலாளாக இருந்தவர். பூணி - ஊர்திகளிற் பூட்டப்படும் எருது முதலியன. (177) | | சிவபணிசொற் றனமினியைம் மகஞ்சோறுந் | | | தெளிமுனிவ கருமஞ் சீர்சால் | | | தவமுரைமந் திரம்வருபா வனைபரம | | | ஞானமெனத் தகுமவ் வைந்தும் | | | அவமறுபூ சனையங்கி யோம்பன்முதல் | | | கருமநனி யாக்கை வாட | | | உவகையுடன் விரதமுஞற் றுதலாதி | | | தவங்களென வுரைப்பர் சான்றோர். |
(இ - ள்.) முனிவனே ! இதுகாறும் சிவன்கோயிற் றிருப்பணி கூறினாம். இனி ஐவகை வேள்வியினியல்பும் கூறுவாம் கேட்டுணர்ந்து கொள்வாயாக ! கருமமும் சிறப்புமிக்க தவமும் கணியாநின்ற மந்திரமும் பாவனையும், மேலான ஞானமும் எனத் தகுதியுடைய வேள்விகள் ஐந்துவகைப்படும். அவற்றுள் கருமவேள்வியாவது குற்றமற்ற இறை வழிபாடும் தீயோம்பலும் முதலியனவாம். உடல் மிகவும் வாடும்படி மகிழ்ச்சியோடு விரதங்களை மேற்கோடல் முதலியன தவவேள்வியாகும், என்று பெரியோர் கூறுவர். (வி - ம்.) சொற்றனம் சொன்னோம். சோறும் - சொல்லுதும். தெளி - தெளிவாயாக. முனிவ - விளி. வேள்வி, கருமவேள்வி, தவ |