பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்481

வேள்வி, மந்திரவேள்வி, பாவனைவேள்வி, ஞானவேள்வி என ஐந்து வகைப்படும் என்பதாம்.

(178)

 மானதமு மந்தமும்பா டிதமுமென
           மந்திரந்தான் மூன்றா மூன்றும்
 மோனமுற மனத்தகத்தே வாயகத்தே
           பிறர்கேட்க மொழித லாகும்
 ஆனவிவை யொன்றற்கொன் றிழிந்தனநே
           ரனாமிகைமுன் விரல்கண் மூன்றின்
 மேனிறுத்தல் வடமுறையா முள்ளிடுதல்
           போகிபுறம் விடுத்தல் யோகி.

(இ - ள்.) இனி மந்திரவேள்வி கணிக்கு முறையானே மானதமும் மந்தமும் பாடிதமும் என மூன்று வகைப்படும். அவைநிரலே மௌனமாக நெஞ்சினுள்ளே கணித்தலும், பிறர் செவியிற்படாது வாயினுள்ளே கணித்தலும், பிறர் கேட்கும்படி கணித்தலும் ஆகும். இவை நிரலே ஒன்றற்கொன்று இழிந்தனவாகும், இவற்றை மானதமாகக் கணிக்குங்கால் ஆழிவிரல் மேலும் மந்தமாகக் கணிக்குங்கால் நடுவிரல் மேலும் பாடிதமாகக் கணிக்கும்பொழுது சுட்டுவிரலின் மேலும் கணிக்கும் மணிவடத்தை இட்டுக் கணிக்க. இது வடமிடும் முறையாகும். இனிப் போகத்தை விரும்புவோர் மணிகளைக் கீழே தள்ளிக் கணிக்க. போகத்தை விரும்புவோர் மேனோக்கி அவற்றைத் தள்ளிக் கணிக்க.

(வி - ம்.) மானதம் - நெஞ்சினுள்ளே கணித்தல். மந்தம் - பிறர் செவியிற்படாதபடி மெல்ல வாயகத்தே கணித்தல். பாடிதம் - உரக்கக் கூறுதல். பாடிதத்தினும் மந்தம் சிறந்தது அதனினும் மானதமே மிகச் சிறந்ததாம் என்பதாம். உள்புறம் என்பன கீழ்மேல் என்பது பட நின்றன.

(179)

 வளியிடைபிங் கலைநடுநா டியினியங்க
           மந்திரிக்கின் முறையே போகக்
 களிசிவணும் வீடணுகு மிரண்டுமுறுங்
           கைவிரலி னிறையே சங்கின்
 ஒளிவடம்புத் திரதீவி படிகமணி
           புண்டரிக மணியொண் கஞ்சம்
 அளிமணிநற் குசைமுடிகண் மணியிவைநே
           ரொன்றற்கொன் றதிக மாமால்.

(இ - ள்.) கணிக்கும்பொழுது உயிர்க்காற்றினை இடைக்கலை நாடியில் இயங்கும்படி செய்யின் கணிப்பார்க்குப் போக மகிழ்ச்சியுண்டாகும், பிங்கலையாயின் வீடுபேறுண்டாம், நடுநாடியாயின் இரண்டும் உளவாம். கணித்தற்குக் கைவிர லிறையும் சங்குவடமும் புத்திரதீவி மணியும் தாமரைமணியும் துளசிமணியும் நல்ல தருப்பை முடிச்சுமாலையும்