| உருத்திராக்க மணியுமாகிய இவை நிரலே ஒன்றற்கொன்று உயர்வுடையன வாகும். (வி - ம்.) வளி - உயிர்க்காற்று. இடைநாடி பிங்கலைநாடி (சுழி முனை நாடி) நடுநாடிகள் என்க. நிரனிரையாகக் கொள்க. (180) | | பரமனருட் டிருவுருவை யுளத்திருத்தல் | | | பாவனையப் பரமன் மெய்ந்நூல் | | | உரிமையினோ துதலோது வித்தல்பொருள் | | | கேட்டல்கேட் பித்த லுள்ளம் | | | விரைவுறநன் கிருத்தலென வைந்தாகு | | | ஞானமகம் விரித்த வீண்டைக் | | | கருமமுத லொன்றற்கொன் றதிகமிவற் | | | றிருபயனுங் கலப்பர் தக்கோர். |
(இ - ள்.) இறைவன் திருவுருவத்தை நெஞ்சத்தே பதிய நினைத்தலே பாவனைவேள்வி எனப்படும். இனி அவ்விறைவன் அருளிய மெய்ந்நூலை ஓதுமுரிமைபெற்று ஓதுதல், தகுதியுடையார்க்கு ஓதுவித்தல், தம்மின் மிக்கார்பால் அவற்றின் நுண்பொருளைக் கேட்டல், தாமும் பிறரைக் கேட்பித்தல், அப்பொருள் தமதுள்ளத்தே இரண்டறக் கலந்து பரஞானமாம்படி உள்ளத்திலே நிறுத்துதல் என ஞானவேள்வி ஐந்துவகைப்படும். ஈண்டு விரித்துக் கூறப்பட்ட கருமவேள்வி முதலியன ஒன்றற்கொன்று நிரலே உயர்வுடையன. இவ்வேள்வி தலைப்பட்ட சான்றோரும் இவற்றால் போகமும் வீடுமாகிய இரண்டு பயனையும் எய்துவர். (வி - ம்.) பரமன் - இறைவன். மெய்ந்நூல் - ஞான நூல். உரிமை - ஓதுதற்குரிய பருவம் சாதிநலம் முதலியன. ஞானமகம் - ஞானவேள்வி. இருபயன் - போகமும் வீடும். (181) | | கருமமுதன் மகமைந்துங் கரைந்தனமா | | | லிவைமுறையாற் கழிப்பி மேலாம் | | | அருடலைப்பட் டவர்பெருமை யறைதுநெடுங் | | | கடன்முகந்த வறவ கேண்மோ | | | ஒருமுதலைத் தழலிடையந் தணர்சரியை | | | கிரியையின ருருவின் யோகர் | | | திருகறுதம் மகமலரிற் காண்பர்மெய்ஞ்ஞா | | | னியரெங்குந் தெரியக் காண்பார். |
(இ - ள்.) நெடிய கடலைக் கையான் முகந்துண்ட அறச் செல்வனே! இதுகாறும் ஐவகை வேள்விகளினியல்பும் கூறினாம். இனி இவ்வேள்விகளை முறையாலே செய்துமுடித்து இவற்றிற்கு மேலாகிய திருவருளைத் தலைப்பட்ட பெரியோர் மாண்பு கூறுதும் கேட்பாயாக ! ஒப்பற்ற முதல்வனாகிய இறைவனை அந்தணர்கள் வேள்வித்தீயினும், |