| | உடங்குறை கமலப் பாசடை நீரோ | | | டொற்றியா மருந்துமந் திரத்தார் | | | விடங்கனன் றுடற்றப் படார்வினை யுடற்ற | | | விடைப்புற வுயங்குறார் சிவத்தின் | | | அடங்கிய வன்ப ரறிவவிவ் விதிகொண் | | | டறிவினை யறிவிடை யடக்கார் | | | தொடங்குறின் வினைமெய்ந் நூல்பயின் றவருந் | | | தொன்றுபோ லதன்பயன் சூழ்வார். |
(இ - ள்.) நீரிலே தோன்றி நீரோடு உறைகின்ற தாமரையினது பசிய இலை அந்த நீரோடு பொருந்தமாட்டா : மருந்தும் மந்திரமும் உடையோர் நஞ்சு சினந்து நலியப்படார்; இறையருளில் அடங்கிய சிவயோகியர், இருவினைகளும் தம்மை மோதுங்கால் முனைப்புடையராய் அவற்றால் இன்பமும் துன்பமும் உறுதலிலர். அறிவனே ! மெய்ந் நூல்களைப் பயின்றவர் தாமும் இம்முறையை மேற்கொண்டு தஞ்சிற்றறிவினைப் பேரறிவினுள் அடக்காதவராயின் தன் முனைப்போடு வினைகள் மோதுங்கால் பண்டுபோன்றே அவற்றால் மோதுண்டு இருவகை நுகர்ச்சியினையும் உடையராவர். (வி - ம்.) கமலப் பாசடை - தாமரையினது பசிய இலை. ஒற்றித்தல் - நனைந்து ஒன்றுபடுதல். மருந்தும் மந்திரமும் என உம்மை விரிக்க. விடைப்புறுதல் - முனைப்புறுதல். அறிவ - விளி. அறிவினை - தஞ்சிற்றறிவினை. அறிவிடை - பேரறிவினுள். நூல் பயின்றவரும் இவ்விதிகொண்டு அறிவினை அறிவினுள் அடக்காராயின் வினை தொடங்குறின் தொன்றுபோல் அதன் பயனாற் சூழப்படுவர் என இயைபு காண்க. (186) | | காவலன் சிறையோர் மண்ணைகோட் பட்டோர் | | | கதியெலா மவர்வழி யன்றி | | | மேவரி ததுபோ லுடறனக் குள்ள | | | வினையெலாம் விமலனால் விரவச் | | | சாவதும் பிறப்புங் கடந்தபே ரின்பந் | | | தணப்புறா திருப்பதே யல்லால் | | | ஆவதா னமக்கென் றொன்றையும் புரியா | | | ரருள்வழிப் பட்டமா தவரும். |
(இ - ள்.) வேந்தனுடைய சிறைக்கோட்டம் புக்கவரும் பேயாற் பற்றப்பட்டவரும் செய்யுஞ் செயலனைத்தும் அவ்வேந்தன் வழியும் பேய் வழியும் நின்று செய்யப்படுவனவே ஆதலன்றி தம்வழியே செய்யப் படுவனவல்ல. அங்ஙனமே சிவயோகியர் உடலினின்று தாம் செய்யும் வினையெல்லாம் இறைவன் விதிவழியே நிகழ்வனவே தம்வழியில் நிகழ்வன அல்ல என்று நன்குணர்ந்துகொண்டு ஏது நிகழினும் தாம் தலைப்பட்ட இறப்பும் பிறப்புங் கடந்த பேரின்பநிலையினின்றும் |