பக்கம் எண் :

486தணிகைப் புராணம்

வழுவாமல் நிலைத்து நிற்பதேயன்றி இதனால் நமக்கு இஃதாகும் என்று விழைந்து யாதொன்றையும் முனைப்போடு செய்யார்.

(வி - ம்.) சிறையோர் - சிறைகோட் பட்டோர். மண்ணை - பேய் கதி - செயல். அவர் அவ்வேந்தனும் பேயுமாகிய அவர்.

 "உலகினில் என்செயலெல்லாம் உன்விதியே நீயே
           உள்நின்றும் செய்வித்தும் செய்கறுன்செயலே"

என்றும் தாதே யாதொன்றையும் முனைப்புடன் செய்யாதடங்கி யிருப்பர்
என்றவாறு.

(187)

 ஆதலா லவர்பா னிகழ்செய லனைத்து
           மமலனா ரருட்செய லாகும்
 காதலா லவர்க்கே பூசனை புரிக
           கரிசறப் பூசனை புரிந்தோர்
 மேதகு மிறைவ னுலகுபெற் றிருந்து
           விரிசத நியுதகற் பங்கள்
 போதலும் பின்றை மாயவன் முதலோர்
           போகபூ மிகளெலாம் வாழ்ந்து.

(இ - ள்.) அங்ஙனமாகலின் அச்சிவயோகியர்பால் நிகழாநின்ற செயல்கள் எல்லாம் அவர் செயலாகாமல் இறைவனுடைய அருட் செயலே ஆகும் என்றறிக. அச்சிவயோகியர்க்குப் பேரன்போடும் வழிபாடு இயற்றுக. குற்றமற அவர்க்கு வழிபாடியற்றியவர் மேலான தகுதியையுடைய இறைவனுடைய உலகிலே சென்று ஆண்டின்புற்றமர்ந்திருப்பர். அவ்வுலகிலே கோடியூழிகளிருந்து கழிந்த பின்னர் திருமால் முதலியோருடைய இன்பவுலகங்களினும் சென்று வாழ்ந்திருந்து.

(வி - ம்.) அவர் - அச்சிவயோகியர். அவர்க்கே என்புழி ஏகாரம் தேற்றப்பொருளது. கரிசு - தீவினை. மேதகுமிறைவன் - பரமசிவன். சதநியுதம் - ஒருகோடி. கற்பம் - ஊழி. மாயவன் - திருமால்.

(188)

 தவம்புரி குலத்து மண்ணிடைத் தோன்றித்
           தம்பிரான் பூசையா தரவால்
 அவந்தெறப் புரிந்து ஞானமுற் றின்பத்
           தழுந்துவ ரமலனார் பதத்தில்
 நிவந்தவா தரவு கடைமுதன் மூன்றா
           நிகழ்கடை யாதர வுடையோர்
 துவந்துவ மூன்று பிறப்படைந் தொழித்துச்
           சோதியு ளிரண்டறக் கலப்பார்.