| வாழ்வோர் துன்பமகலும்படி இயற்றும் இறையறத்தின் பண்பினையும் கூறுவாம் கேட்பாயாக! அறமாவன - அன்புடனே ஈதலும், தீயோம்பலும், இறைவன் திருக்கோயிலெடுத்தலும் இறைவன் வழிபாடியற்றலும் என்னும் இந்நான்குமேயாம். இவ்வறங்களைச் செய்தோர்க்கு நற்பயன்கள் அனைத்தும் ஒருசேர வந்தெய்தும். (வி - ம்.) முனிவ - விளி. துனிவு - துன்பம், பசி முதலியன. சொல்லுதும் - கூறுவோம். அறி - அறிக. கனிவு - இரக்கமுமாம். ஈதல் - உண்டி முதலியன வழங்குதல். எரி - வேள்வித்தீ. ஆலயம் - திருக்கோயில். பலமெல்லாம் புகுதரும் என்க. பலம் - பயன். (191) | | ஈத லாவது பாத்திர மென்பவர்க் கிடம்பொழு துறநூலின் | | | நீதி யாதர வடைந்துதா தாவெனு நீர்மையர் பொருணல்கல் | | | ஓது பாவெனல் பாவமற் றதினெடுத் துறுத்துத றிரமென்ப | | | தாத லாற்கரி சறுத்துநற் கதியினும் பவர்கள்பாத் திரமாவார். |
(இ - ள்.) அந்நான்கனுள் ஈதல் என்பது அறநூலுணர்ச்சியோடு இயற்கையாகவே அன்புமுடைய வள்ளன்மையுடையோர் தகுதியுடைய விருந்தினர்க்குச் செவ்வியுடைய இடத்தானும் பொழுதானும் உண்டி முதலிய பொருள்களை வழங்குதலேயாகும். தகுதியுடைய விருந்தினரைப் பாத்திரம் என்று கூறுப. இதன்கண் பா என்றதற்குப் பாவம் என்பது பொருள். திரம் என்றதற்கு (அப்பாவத்தினின்றும்) எடுத்து நிறுத்துதல் என்பது பொருள். எனவே தீவினையை அகல்வித்து வீட்டிலே செலுத்தும் தகுதியுடையோரே ஈதற்கேற்ற பாத்திரம் ஆவர் என்றுணர்க. (வி - ம்.) காலமும் இடமும் செவ்வியனவாகும் பொழுது ஈதலே அறம் என்றது அறிக. நூலின் நீதி திருக்குறள் முதலிய நூலில் விருந் தோம்பற்குக் கூறும் முறை யென்க. "காலத்தினாற் செய்த வுதவி" எனவும், "உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" எனவும் வரும் வள்ளுவர் மெய்ம்மொழிகளையும் ஈண்டு நினைக. (192) | | கரும முற்றவர் கற்றறி மேதையர் காழின்மந் திரஞ்சான்றோர் | | | பெருமை யோகினர் ஞானிய ரிவர்க்குளம் பெட்டுத விடினேதும் | | | ஒருபி றப்புநூ றாயிர மூழிபே ரூழியும் பயனிற்கும் | | | பொருவி லாச்சிவ ஞானயோ கத்தரே பொருவில்பாத் திரமாவார். |
(இ - ள்.) சரியை கிரியை நெறிகளிலே நிற்போரும் மெய்ந்நூல்களை ஓதியுணர்ந்த சான்றோரும் கீழ்மையில்லாத மந்திர வேள்வியினிற் போரும் யோகியரும் ஞானவேள்வியிற் பயில்வோரும் ஆகிய இவர்க்கு விருப்பத்தோடு பொருள்களை ஈயின் நிரலே ஒருபிறப்பும் நூறுபிறப்பும் ஆயிரவூழியும் பேரூழியும் அதன் பயன் ஈவார்கண் நிலைபெறுவதாம். எனவே ஒப்பற்ற சிவஞான யோகமுடையரே ஒப்பற்ற பாத்திரமுமாவார் என உணர்க. (வி - ம்.) கருமமுற்றவர் - சரியை கிரியையினிற்போர். மந்திரஞ் சான்றோர் - மந்திர வேள்வி செய்வோர். யோகினர் - அகவழிபாடு |