பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்489

செய்வோர். ஞானியர் - ஞானவேள்விகள் புரிவோர். ஞானயோகத்தர் சாக்கிராதீத நிலையில் நிற்போர் சீவன்முத்தர்.

(193)

 திரைசெய் நீர்விழுஞ் சிலையினைப் புணையன்றிச்
           சிலைகரை யேற்றாதால்
 புரைசெய் பாவத்தி னழுந்தினார் தமைப்புரை
           யொழிந்தவர் தாமன்றி
 நிரைசெய் மேற்கதி செலுத்தவல் லாரலர்
           நிகழ்கரி சினரற்றால்
 உரைசெய் பாத்திர மபாத்திர மறிந்தளித்
           தொழிக்கநற் பயன்வேட்டோர்.

(இ - ள்.) கடலின்கண் விழுந்த கல்லைத்தெப்பமே கரையேற்றுவதன்றி மற்றொரு கல் கரையேற்றுதல் கூடாது. குற்றம் செய்தலினாலே உண்டாகின்ற பாவத்திலே முழுகியிருப்போரைக் குற்றந்தீர்ந்த மேலோரல்லது பாவச் செயலுடைய ஏனையோர் அப்பாவத்தினின் றகற்றி வீட்டுநெறிக்கட் செலுத்துதல் வல்லராகமாட்டார். அங்ஙனமாகலின் அறத்தால் வரும் பயனை விரும்பியவர், ஈண்டுக் கூறிய நற்பாத்திரமும் தீயபாத்திரமும் ஆராய்ந்தறிந்து நற்பாத்திரங்கட்கு வழங்கி ஏனையோர்க்கு வழங்குதல் ஒழிக.

(வி - ம்.) திரைசெய்நீர் - கடல். சிலை - கல். புனை - தெப்பம். ஆல் - அசை. புரை - குற்றம். மேற்கதி - வீடு. கரிசு - குற்றம். அற்றால் -
அங்ஙனமாகலின்.

பாத்திரமல்லாதார்க்கு ஈவோர் நரகம் எய்துவர் என்பதுபற்றி அறிந்து ஒழிக்க என்றார். இதனை,

 "அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினால் அலறு முந்நீர்த்
           தடங்கட னடுவண் தீவு பலவுள அவற்றுட் டோன்றி
           உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர்
           மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேல் மன்ன ரேறே.

எனவரும் சீவகசிந்தாமணியானும் (2851) தெளிக.

(194)

 அந்த ணாளர்கள் கோடியோர்க் கருத்திய வரும்பயன் வறிதென்ன
 வந்து மல்குறும் பிச்சைஞா னியர்கரம் வழங்குவார்க் கெனிலன் பால்
 வெந்த பல்வகை யுணவுதூ சருங்கலன் வேண்டிய கொடையெல்லாம்
 எந்தை யோடொரு மித்தவன் னவர்க்கலா லெண்ணுறா ரறிந்தோரே.

(இ - ள்.) ஒருகோடி அந்தணர்க்கு முறைப்படி உணவு வழங்கிய தனால் உண்டாகும் பெறற்கரிய பயனும் சிறிதென்னும்படி பிச்சைக்கு வந்த ஒரு சிவயோகியார் கையில் அன்போடு உணவு வழங்கினவர்க்கு பெரும்பயன் வந்து மேலும் பெருகாநிற்கும் என்று நூல் கூறுவதனால், எம்பெருமானோடு இம்மையிலே இரண்டறக் கலந்துவிட்ட அத்தகைய சிவயோகியார்க்கன்றி அறிந்தோர் வெந்த பலவகைப்பட்ட