பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்49

(வி - ம்.) உளர்தல் - தடவல்; ஈண்டுப் பாடலின்மேற்று; பீலி - சிறுசின்னம்; கம்புள் - சம்பங்கோழி; "கரைநின் றாலு மொருமயில் தனக்குக், கம்புட் சேவல் கனைகுரன் முழவா" என்ற மணிமேகலையடியா னுணர்க. குரண்டம் - கொக்கு. வீற்றிருத்தல் வேறொன்றற்கில்லாத சிறப்புடனிருத்தல். "பாடின் னருவிப் பனிநீ ரின்னிசை, தோடமை முழவின் றுதைகுர லாக, கணக் கலையிகக்குங் கடுங்குரற் றூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்யா ழாக" அகம். 82 ஆம் பாட்டி னடிகளின் கருத்து இப்பாட்டி னமைந்திருத்தல் காண்க.

(78)

 இந்திரற் காக்கம் வேண்டி யீட்டிய வேள்வித் தீயின்
 வந்தெழு மவுணர் தாக்க மறுகுமேழ் முனிவ ரேய்ப்ப
 முந்துசெங் கமலத் தேனுண் மூசளி வெண்பூச் * செற்றுத்
 தந்தலை மிதிப்ப வன்னந் தணப்பன விலஞ்சி தோறும்.

(இ - ள்.) அன்னப் பறவைகள் இந்திரனுக்காக்க முளதாதலை விரும்பிச் செய்யப்பட்ட யாகாக்கினியினின்றுந் தோன்றிய அவுணர்கள் எதிர்த்தலினால் மனமறுகுகின்ற ஏழு முனிவர்களைப்போலச் செந்தாமரை மலரின்கணுள்ள தேனை முன்னருண்ண மொய்க்கின்ற வண்டுகள் வெண்டாமரை மலரை நிகர்க்கும் தங்கள் தலைகளை மிதித்தலினால் மடுக்கடோறும் நீங்குவனவாம்.

(வி - ம்.) எழு முனிவர்கள் - இந்திரனேவலாற் செய்யப்பட்ட யாக குண்டத்தில் அசுரர் தோன்றி அவர்களைத் துரத்தினர் என்பது புராண கதை. மூசல் - மொய்த்தல்; வெண்பூ - அன்னத்தின் சூட்டு; அதனைப் பூவென லுலகவழக்கு. தம் ஈண்டன்னங்கள்; செத்து - உவம வுருபு. இது பொதுமையணியும் உவமையணியுங் கலந்திருத்தலால் கலவையணி.

(79)

 ஓம்புதன் குறியி னோடு முறைந்தெனக் கமலம் பூத்த
 தீம்புனற் றடத்துண் மேதி சென்றுமேய்ந் துழக்க விண்ணில்
 தாம்பெரு வாளை வெய்யோற் றாக்குவ கமலத் தேவி
 கூம்புறப் பானா ணீங்குங் குற்றங்கண் டொறுத்தன் மான.

(இ - ள்.) உலகத்திலுள்ள வுயிர்களைப் பாதுகாக்கின்ற நீரானது தன்னடையாளமாகிய தாமரையுடன் வதிந்ததென்று சொல்லத் தாமரை மலர்ந்த இனிய நீரையுடைய தடாகத்தின்கண் எருமைகள் சென்று (அப்பூக்களை) யுண்டுகலக்க ஆகாயத்திற் றாவாநிற்கும் வாளைமீன்கள் தாமரையாகிய மனைவி வருந்தப் பாதிநாளில் நீங்குகின்ற குற்றத்தை யறிந்து தண்டனை செய்தலை யொப்ப (அவள் நாயகனாகிய) சூரியனைத் தாக்குவனவாம்.

(வி - ம்.) தன் என்றது ஈண்டு நீரை; குறி - அடையாளம் 'குறிகள் வச்சிரத்தினோடு' என்னுஞ் சிவஞானசித்தி சுபக்கம் இரண்டாஞ் சூத்திரம் 68 ஆம் செய்யுளானறிக. தாவுமென்னுஞ் செய்யுமென்னெச்சத் தீற்றுயிர்மெய் கெட்டது. பானாள் - பாதிநாள்; பகலும் இரவும் கூடியது ஒருநாள்; அதிற் பாதிநாள் இரவெனக் கொள்க.

(80)

 * செத்தும் - பாடபேதம்.