| "அண்ணாத்தல் செய்யா அளறு" என்றெழுந்த திருக்குறள் நினைவிற் றோன்றிய தென்க. நுவன்றும் : தன்மையொருமை வினைமுற்று. என்றாம் - என்று கூறினேம். அவன் - பாத்திரமல்லான். கிளப்பாம் - கூறுவாம். நுனித்த வாலறிவுடையவ என்றது, விளி. (202) வேறு | | அமலனடிக் கன்பிலார் பிறப்பை யஞ்சா | | | ரருந்தவரென் றுலகுதமை மதித்துப் பேண | | | விமலனடி யவர்கொலத் தொளித்தோ ரன்னோர் | | | விதியினவர்க் களிப்பினுமவ் வீகை வித்தும் | | | சமமறுநெல் லுவர்நிலத்து மனுவிற் றூவுந் | | | தக்கவரா குதிசாம்ப ரிடத்தும் வாட்கண் | | | கமலமனார் விழைவலியின் மாட்டு மென்னாய்க் | | | கழியுமது போல்வாளா கழியு மன்றே. |
(இ - ள்.) இறைவன் திருவடிகட்கு அன்பில்லாதாரும், பிறப்பை அஞ்சாதவரும், செயற்கரிய தவவொழுக்கமுடைய பெரியோர் இவர் என்று உலகத்தோர் தம்மை மதித்துத் தமக்குவேண்டிய பொருள் முதலியன கொடுத்துப் பேணும் பொருட்டு இறைவன் அடியாருடைய வேடத்தினுள்ளே மறைந்து திரியும் படிற்றொழுக்க முடையோரும், இன்னோரன்ன பிறரும் பாத்திரம் அல்லாதார். இவர்க்கு நூன்முறைப்படி உணவு முதலியன வழங்கினும் அவ்வீகையானது, நன்னிலத்திலே விதைத்தற்குரிய நெல் சமனில்லாத உவர் நிலத்தினும், தக்கவர் மந்திரத்தோடே வேள்வித் தீயின்கண் வழங்கும் அவி சாம்பரிடத்தும், வாளும் தாமரைமலரும் போன்ற கண்ணையுடைய இளமகளிரின் காமவிருப்பம் பேடியின்மாட்டும் யாதாய் முடியும் அதுபோன்று பயனிலவாய் ஒழியும். (வி - ம்.) அவ்வீகை உவர்நிலத்து வித்திய நெல்லும் சாம்பரினிட்ட அவியும் அலிகை விழையும் மகளிர் காம விருப்பமும் போன்று பயனிலதாய் முடியும் என்க. சமமறு நிலத்து வித்தும் நெல்லும் என மாறுக. சாம்பரின் இடப்படும், கொள்ளும் விழைவும், என ஏற்ற பெற்றி வருவித்துக்கொள்க. என்னாய்க் கழியும் என்ற வினா பயனில் வாதல்போல் என்னும் பொருளை வற்புறுத்து நின்றது. (203) | | பாத்திரமு மபாத்திரமு முயிரே யொன்று | | | பயனாக்க வொன்றாக்காப் பண்பென் னோவென் | | | றாத்தனுரை யிடத்தேது மயிர்த்த னீரி | | | னழுந்தாத மரத்தொடியைந் தயமேற் றொக்க | | | மூத்தகனங் கரைசேர்க்கு மரத்தொன் றாதேன் | | | முழுகுமது தானுமிந்த முறைமை யன்றோ | | | காத்தருளு மிறைவனொடு கலந்தார் நன்மை | | | காட்டுவதுங் கலவார்காட் டாத வாறும். |
|