| | இணக்கமுறு மிருப்பெழுகை விரைந்து போத | | | லெதிர்கொள்கை தவிசினிடை யிருத்தல் பூசை | | | பிணக்கமற வுஞற்றலின்சொ லாதி தம்மாற் | | | பெட்டுவப்புச் செயல்பிரியி னுடங்கு சேறல் | | | கணித்தவிவை யேழானும் பயன்கள் கொள்வார் | | | கரிசிலர்க ணல்கூர்ந்த காலு மாதோ. |
(இ - ள்.) விருந்தினர்பால் வணக்கமுடையராதலும், வரையாது வழங்கும் பண்பும், விருந்தினர்பாற் கேண்மையுடையராதலும், சின மில்லாதவரும் இரக்கமுடையோரும் ஆகிய வள்ளல்கள் விருந்தினரைக் கண்டுழி இருக்கையினின் றெழுதலும், விரைந்து செல்லுதலும், எதிர் கொள்ளுதலும், இருக்கையினமர்த்தலும், மாறுபாடின்றி வழிபாடியற்றலும், இன்சொற் கூறலு முதலிய செயல்களால் விரும்பி விருந்தினர்க்கு உவப்புச் செய்தலும் பிரியுங்காற் உடன்போய் வழிவிடுதலும் என்று நூல் வகுத்துக்கூறிய இவ்வேழு செயலானும் குற்றமற்ற வள்ளலாவோர் நல்கூர்ந்த விடத்தும் விருந்தோம்பிப் பயன்களை எய்தா நிற்பர். (வி - ம்.) வள்ளன்மை யுடையார் பண்புகள். வணக்கமுடைமை, வரையாதளித்தல். உறவாந்தன்மையுடைமை, சினமின்மை, இரக்கமுடைமை முதலியன. அவர் செயல், இருக்கை எழல், விரைந்து எதிர் போதல், வரவேற்றல், தவிசிலிருத்தல், வழிபாடுசெய்தல், உவப்புச் செயல், உடன்சேறல் ஆகிய ஏழும் என்க. | | "இருக்கை எழலும் எதிர்செலவு மேனை | | | விடுப்ப வொழிதலோ டின்ன குடிப்பிறந்தார் | | | குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ | | | டொன்றா வுணரற்பாற் றன்று" (நாலடி - 143) | என்றார் பிறரும். (206) | | பாத்திரத்தின் மிக்கபாத் திரமெய்ஞ் ஞானி | | | படர்ந்திரவா னவனிருக்கும் பாங்க ரண்மி | | | ஈத்திடுக வவனொன்றும் வேண்டா னேனு | | | மீகுநர்க்குப் பயன்கருதி யேற்றுக் கொள்வான் | | | வாய்த்திடுமா தரவிரக்கத் தோடு மீவான் | | | வாங்கினரோ டரனுலக மருவி வாழ்வன் | | | வீத்திடுமா தரவிரக்கத் தீந்தோ ரெல்லாம் | | | வெந்நிரயத் தழுந்துவரேற் றவர்க ளோடும். |
(இ - ள்.) பாத்திரங்களுள் வைத்துத் தலைசிறந்த பாத்திரம் சிவயோகியே, அவன் பிறர்போன்று இல்லந்தோறுஞ் சென்று இரப்பானல்லன், ஆதலால் அச்சிவயோகி இருக்குமிடத்தே சென்று ஈயக்கடவர். அத்தகைய சிவயோகி யாதொன்றனையும் விரும்புவது இல்லை எனினும் |