| | காசிகுருக் கேத்திரங்கா ளத்தி காஞ்சி | | | கனகசபை சேதுமுத லிறைவன் வைப்பும் | | | தேசுதிகழ் சீபரிபூ ரணவிவ் வோங்கல் | | | செந்தில்பரங் குன்றாதி யெமது வைப்பும் | | | வீசுதிரைக் கங்கைநதி முதலாந் தீர்த்த | | | வியன்கரையும் விரிகடலின் கரையுங் கண்டை | | | ஓசையெழு மானினஞ்சே ரிடமு முண்மை | | | யுணர்ந்தவர்வா ழிடமுமிட மாகு மன்றே. |
(இ - ள்.) காசியும் குருக்கேத்திரமும் காளத்தியும் காஞ்சியும் தில்லையும் சேதுவும் உள்ளிட்ட எந்தையார் திருத்தலங்களும், ஒளி திகழாநின்ற சீபரிபூரணமலை என்னும் இத்திருத்தணிகையும் திருச்செந்திலும் திருப்பரங்குன்றமும் உள்ளிட்ட எம்முடைய திருத்தலங்களும் அலையெறியும் கங்கை முதலிய கடவுட்டன்மையுடைய பேரியாற்றங் கரைகளும் மணியொலித்தற்குக் காரணமான ஆநிரைகள் வதியும் இடங்களும் ஞானநிட்டை யுடையோர் வாழும் இடங்களும் தலைசிறந்த இடங்களாகும். (வி - ம்.) கண்டை - மணி. ஆனினம் - பசுநிரை. சிறந்த இடமாகும் என்க. அன்றும் ஏயும் அசைகள். (209) | | இரவியைவெண் மதியையர வடுக்குங் காலம் | | | ஈரயன முதற்பலவாங் கால மீதற் | | | குரியவெலா முரைத்தனமீண் டுரைத்தா முன்னே | | | யும்பனா லயமியற்ற லீண்டை யீத்தல் | | | எரிவளர்த்த லொடுபொதுவி னுரைத்துப் போந்த | | | வீசன்பூ சனைமுன்னுந் தொகுத்தா மேனும் | | | அரியயனுக் கரியபிரான் பூசையாற்றும் | | | அத்தருமஞ் சிறப்பினுமற் றறைகிற் பாமால். |
(இ - ள்.) ஞாயிற்றையாதல் திங்களையாதல் இராகு கேதுக்கள் மறைக்குங்காலமும் ஞாயிறு வடதிசைச் செலவு தொடங்குங் காலமும் தென்றிசைச் செலவு தொடங்குங் காலமும் உள்ளிட்ட சிறந்த காலங்கள் எல்லாம் ஈதற்குச் சிறந்த காலங்களாம். அகத்திய! ஈண்டு ஈதற்குரிய பாத்திர முதலிய எல்லாம் கூறினேம். இறைவனுக்குக் கோயிலெடுக்கு முறைமையும் முன்னே கூறினேம். ஈண்டை ஈதலும் எரி வளர்த்தலும் ஆகிய இவற்றோடு பொதுவிற் கூறிய இறைவன் வழிபாடு தொகைவகையாற் கூறினேம் எனினும் திருமாலும் பிரமனுந் தேடியுங் காண்டற் கரிய இறைவனுக்கு வழிபாடியற்றும் அவ் வறத்தினை இனிச் சிறப்பு வகையானும் கூறுவாம். |