| தொகுத்தாம் - தொகுத்துரைத்தேம். அரி - உருபும் உம்மையும் விரிக்க. அறைகிற்பாம். (210) | | அடருயிர்கொ லாமைபொறை வாய்மை நாணே | | | யாதரவே யடக்கமே யீகை தீமை | | | உடறவம்பா வனையிறைவன் பூசை பத்தும் | | | ஒண்டரும மிறைவன்பூ சனைக்கு மற்றைத் | | | தொடர்தருமொன் பதுமுறுப்பா முறுப்பு முற்றுஞ் | | | சூழ்ந்திறைவன் பூசனையை யுஞற்றி னாரும் | | | படருமவற் றுட்சிலகொண் டிறைவன் பூசை | | | பண்ணினருஞ் சிவலோகம் பற்றி வாழ்வார். |
(இ - ள்.) உலகிற் செறிந்துள்ள உயிரினங்களைக் கொல்லாமையும், பொறை யுடைமையும், நாணமுடைமையும், அன்புடைமையும், அடக்கமுடைமையும், ஈகையும், தீவினையை அழித்தற்குக் காரணமான தவமுடைமையும், பாவனையும் இறைவன் வழிபாடும் ஆகிய பத்தும் சிறந்த அறங்களாம். இவற்றுள் இறுதியினின்ற இறைவன் வழிபாட்டிற்கு அதனைத் தொடர்ந்த நின்ற ஒன்பதும் உறுப்புக்களாம். இவ்வுறுப்புக்கள் முழுவதுமுடையராய் இறைவழிபாடு செய்தோரும் விரிந்த இவையிற்றுட் சிற்சிலவே கொண்டு இறைவழிபாடு செய்தோரும், சிவலோக மெய்துவர். (வி - ம்.) அடர் உயிர் - வினைத்தொகை. நாண் - உயர்ந்தோர் தமக்கொவ்வாத கருமங்களில் நாணுதல். "கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல், நல்லவர் நாணுப் பிற" என்பது (திருக்குறள் 1011) ஆதரவு - அன்பு. அடக்கம் - மெய்மொழிமனங்கள் தீநெறிச் செல்லாது அடங்குதல். உடல்தவம் - வினைத்தொகை. உடலுதல் - அழித்தல். இறைவழிபாடு உறுப்பி ஏனைய ஒன்பதும் உறுப்பு என்றவாறு. (211) | | அத்தகைய சிவபுரிவாழ் வாரின் பொன்றே | | | யல்லாது துன்பமறி யாரவ் வாழ்வும் | | | கைத்தலமன் பூசனைபெட் டவரே யெல்லாங் | | | கழன்றுமுழுப் பாழ்வெளியிற் கலந்து வாழ்வார் | | | பைத்தவினை பறிக்குமுறுப் பவற்று ளியாதும் | | | பற்றாது சிவபூசை பரித்து ளாரும் | | | மெய்த்தபயன் பெறுவரந்தப் பயனுந் தேற | | | விரித்துரைத்தும் வினைத்திருக்கை மிளிர்த்து ளாயே. |
(இ - ள்.) இருவினையாகிய குற்றங்களைப் பிறழ்ந்தொழியச் செய்த துறவியே ! அத்தகைய சிவலோகத்திலே வாழும் பேறுபெற்றோர் எஞ்ஞான்றும் இன்பம் நுகர்ந்திருத்தலே அன்றி ஒருசிறிதும் துன்பத்தை நுகர்வதிலர். மேலும் மேலான வீட்டின்பமும் அவர்தம் கையகத்துள்ளதே போன்று நாளடைவில் அவர்க்குரியதாம். இறை |