பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து5

கண்ணோட்டமில்லாத ஆணவமலமாகிய கொடிய யானையைப் பிடித்தடக்கும் பொருட்டு அம்மலக் குற்றத்தையுடைய வடியேனுக்கு இரண்டு திருக்கரங்களையுமாக்குந் தலைவராகிய, தணிகாசலத்தின்கண் நித்திய வாசஞ்செய்யும் ஆபச்சகாய னென்னுந் திருப்பெயரையுடைய விநாயகப் பெருமானை மனத்தாற் றழுவிக்
களிப்படைவாம்.

(வி - ம்.) ஆக்கி, ஆக்கி, ஆக்கி, ஆக்கு மண்ணலெனக் கூட்டுக. பண்ணியமீண்டு மோதகத்தை யுணர்த்திநின்றது; மருப்பமர் திருக்கரம் கயமுகனைக் கெடுத்துச் சுரர் துன்பங் களைந்து அவர்க்கு வாழ்வளித்தலின், விண்ணவர்க்காக்கி யென்றார். அரதன கலசம் வைத்திருத்தல் அம்மையப்பரை நீராட்டி வழிபடும் பொருட்டாகலின் தந்தை தாய்க் காக்கி யென்றார்; அடக்க வென்னுஞ் செயவெனெச்சம் செய்தென்னெச்சமாகத் திரிந்துநின்றது. என்னை? "வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய" என்பதோத்தாகலின்.

(3)

சுப்பிரமணியர்

 ஓங்கொளியாய் விசும்பாதி தொறுமியலுந்
           தனதியல்பை யுருவின் மாட்டும்
 பாங்குபெறத் தெரித்ததுபோற் பலபொறியாப்
           பரமர்விழி பயந்த ஞான்று
 தேங்கொளியாய் வெளியடர்ந்து வளிதொடர்ந்தொள்
           ளொளிபடர்ந்து தெளிநீர்ப் புக்கு
 நீங்கிவிளை யாட்டயர்ந்து தணிகையமர்
           பெருவாழ்வை நினைந்து வாழ்வாம்.

(இ - ள்.) எல்லாவற்றினும் மேம்பட்ட வொளியாகிய தமது சத்தி யுருவமாகி ஓசை யூறொளி சுவை நாற்றமென்னும் அருவமாகிய சூக்கும பூதங்க ளைந்தன்கண்ணு மிக்க சோதிவடிவமாகக் கலந்த தனது பொதுவியல்பை தூலபஞ்ச பூதங்களினிடத்தும் பகுதிப்படத் தெரிவித்ததுபோற் பலபொறிகளாம்படி இறைவன் றிருக்கண் வெளியிட்ட காலத்து மிகுந்த வொளியாய் ஆகாயத்தினிடத்து நிறைந்து வாயுவாற் றொடரப்பெற்று, மிக்க வொளியையுடைய அங்கியாற் செலுத்தப்பெற்றுத், தெளிந்த நீரிடத்துச் சென்று பின்னரதனின்றும் நீங்கித் திருவிளையாட்டைச் செய்து தணிகாசலத்தின்க ணெழுந்தருளிய பெருவாழ்வாகிய முருகப் பெருமானைத் தியானித்து வாழ்வாம்.

(வி - ம்.) ஓங்கொளியா யியலுந் தனதியல் பென்க; விசும்பாதி ஆகாய முதலிய சூக்கும பஞ்சபூதங்கள்; இயலுமியல்பு - கலந்த தனதிலக்கணம்; உரு ஈண்டுத் தூலபஞ்ச பூதங்கள்; வெளி - ஆகாயம்; அடர்தல் - நிறைதல்; இனி அயர்ந்து என்னுஞ் செய்தென்னெச்சத்தை செயவெனெச்சமாகத் திரித்து விளையாட்டயரத் தணிகையமர்பெரு வாழ்வெனக் கூட்டினு மமையும்; இனி விசும்பாதி தொறுமென்பதற்கு வானே முதல்களையி னென்புழிப்போலத் தோற்ற முறைபற்றி விசும்புக்குக் கீழுள்ள தத்துவங்களும் ஒடுங்கு முறைபற்றி விசும்புக்கு மேலுள்ள தத்துவங்களுமாகிய எல்லாத் தத்துவங்களினு மென்றலு