பக்கம் எண் :

6தணிகைப் புராணம்

மொன்று; இனி உருவின் மாட்டுமென்பதற்குத் திருவுருக்கொண்ட விடத்தும் எனக் கூறலுமாம்.

(4)

தெய்வயானை வள்ளியம்மையார்

 இறைகதித்த சூர்முதலை யிறுப்பவர
           னேயிளையோ னான வாற்றான்
 முறைகதித்த விருசுடரே முகத்துவிழி
           யெனத்தெரிக்கு முறைமை யேய்ப்ப
 நறைகதித்த மலர்க்கழுநீர் நளினமவன்
           விழியருகு நலக்க வேந்தி
 நிறைகதித்த வுளத்தொடிடம் வலமமர்ந்த
           மாதர்பத நினைத்தல் செய்வாம்.

(இ - ள்.) இறைமைத் தன்மையா லுயர்ந்த சூரனாகிய தலைவனைக் கெடுக்க இறைவனே முருகக் கடவுளாகத் திருவவதாரஞ்செய்த தன்மையான், (நாடோறும்) முறையாகச் செல்லுதலைப் பொருந்திய சூரிய சந்திரர்களே அவன் றிருமுகமண்டலத்திலுள்ள விழிகளென்று தெரிவிக்கு முறைமையைப் போல உயர்ந்த மணமுடைய செங்கழுநீர் மலரையும் தாமரை மலரையும் அப்பெருமான் றிருக்கண்களின் பக்கலிலே நன்மை யுண்டாகத் தாங்கிக் கற்பு மேம்பட்ட வுள்ளத்தோடு இடமும் வலமுமாக வெழுந்தருளிய தெய்வயானை வள்ளியம்மையாராகிய இருவர் பாதங்களைத் தியானஞ் செய்வாம்.

(வி - ம்.) இறைமை - இறைமைத் தன்மை, கதித்தல் ஈண்டு உயர்தல்; நிறை - கற்பு; ஏய்ப்ப ஏந்தி அமர்ந்த மாதரெனக் கூட்டுக; தெய்வயானையார் வலப்பாகத்திலும் வள்ளியம்மையா ரிடப்பாகத்திலு மிருத்தல் நூன்மரபு; ஏகாரங்கள் தேற்றப் பொருளில் வந்தன; மலர் பின்னருங் கூட்டப்பட்டது; இடம் வலம் என்புழி உம்மைகள் தொக்கன.

(5)

திருநந்தி தேவர்

 கள்ளகந் தளித்த மலர்த்தலைச் சேக்குங்
           கடவுணா ரணன்முத லானோர்
 உள்ளகந் தழும்ப மலர்ப்பத மமைத்திட்
           டுடலெலாந் தழும்ப1 வேத் திரத்திண்
 வள்ளலங் கமலத் தனிக்கர மமைத்த
           வரதனைக் கற்றைவெண் கதிர்கால்
 வெள்ளியங் கயிலைக் காவல்பூண் டருளும்
           வீரனை வார்கழல் பணிவாம்.

 1. 'வேத்திரந்திண்' என்றிருப்பிற் பொருத்தம்.