| (வி - ம்.) ஒருமூவரும் ஒருவனே என்று தெளிந்தென்க. பெருகு போகம் - வினைத்தொகை. வைகுந்தம் - திருமாலுலகம். பெட்ட - விரும்பியன. பொருவிலன்பு - இறையன்பு. இம்மையில் திருநிலாவி என்க. (217) | | ஏன்ற வன்பினாற் பொருளினா லொழுக்கினா லீசனைப் பணிந்தோரும் | | | ஆன்ற வவ்வநற் பயன்றனக் கேன்றவா னுலகினைத் தலைப்பட்டுக் | | | கான்ற பேரெழி லரம்பையர்க் கலவியங் களிதிளைத் தொரீஇமண்ணில் | | | தோன்றி யெவ்வகை யுறுப்பொடும் பூசித்துத் துன்னுவர் சிவலோகம். |
(இ - ள்.) இயல்பினாலாய அன்பினாலாதல், பொருளினாலாதல் தவம் முதலிய ஒழுக்கத்தினாலாதல் இறைவனை வழிபட்டோரும் நிரம்பிய அவ்வவற்றின் நல்ல பயன்களை நுகர்தற்கேற்ற வானுலகங்களைத் தலைப்பட்டு, ஆங்காங்கே பேரழகொழுகும் வானவர் மகளிரோடு கூடி அழகிய இன்பத்திலே மூழ்கியிருந்து அவ்வுலகங்களினின்றும் நீங்கி மீண்டும் இந்நிலவுலகிலே வந்து பிறந்து எல்லா வுறுப்புக்களோடும் இறைவனை வணங்குதற்குரிய செவ்வியெலாம் பெற்று வழிபட்டுச் சிவலோகத்தை எய்தாநிற்பர். (வி - ம்.) ஏன்ற - இயன்ற என்பதன் மரூஉ. ஆன்ற - நிறைந்த. ஏன்ற - ஏற்ற. தலைப்படுதல் - அடைதல். எழில்கான்ற எனமாறுக. எவ்வகை வுறுப்பொடும் பூசிக்கும் செவ்விபெற்றுப் பூசித்து என்பது கருத்து. (218) | | விளங்க வோதுமிவ் வுலகங்கண் மேலுமூன் | | | றுலகங்கள் விராய்நிற்கும் | | | வளங்கு லாவுநம் முலகொன்று நிலையுமவ் | | | வைப்பின்மேன் முலைக்கோட்டில் | | | துளங்கு நூலிடை யுமையவ ளுலகுறுந் | | | துலங்குமப் பதிமேலால் | | | களங்கு லாவிய கண்டர்வா "லகுறுங் | | | காழ்வினைக் குறும்பட்டோய். |
(இ - ள்.) காழ்த்த இருவினைகளாகிய பகையினைக் கொன்ற அகத்தியனே ! ஈண்டு விளங்கும்படி விரித்தோதிய குய்யகவுலக முதலிய உலகங்கட்கு மேலே மூன்றுலகங்கள் ஒன்றனோடொன்று தொடர்புடையனவாய் நிலைபெறும். அம்மூன்றனுள் ஒன்றாக வளமிக்க நம்முடைய உலகம் நிலைபெறும். அவ்வுலகின்மேல் முலையாகிய கோட்டினையும் அசைகின்ற நூல்போன்ற இடையினையும் உடைய எம் பிராட்டி உமையம்மையாரின் உலகம் நிலைபெறாநிற்கும்; விளங்காநின்ற அவ்வுலகின்மேலே நஞ்சாகிய மறுவிளங்கிய கண்டத்தையுடைய எம் பிரானாகிய இறைவன் வதியும் உலகம் நிலைபெறாநிற்கும். (வி - ம்.) நம்முலகென்றது - கந்தலோகத்தை. வைப்பு - உலகம். முலைக்கோட்டினையும் இடையையும் உடைய உமை என்க. கோடு - |