பக்கம் எண் :

502தணிகைப் புராணம்

கொம்பு, சிமையமுமாம். களம் - கறுப்பு, களங்கம். காழ்வினை : வினைத்தொகை.

(219)

 எம்மை யன்பொடு பூசனை புரிந்தவ ரெம்முடை யுலகத்தார்
 அம்மை மென்மலர்ப் பாதபூ சனைசெய்தோ ரவளுடை யுலகத்தார்
 மம்ம ரின்றியெந் தையைவழி பட்டவர் வயங்கவ னுலகத்தார்
 செம்ம னல்குமச் சிவபுர மடைந்தவர் திருமுறார் பதஞ்சேர்வார்.

(இ - ள்.) அகத்திய கேள் ! எம்மை அன்புடனே வழிபாடு செய்வோர் எம்முடைய உலகத்தை எய்தியின்புறுவர். எம்மன்னையாகிய இறைவியுடைய மெல்லிய மலர்போன்ற திருவடிகளை வழிபட்டோர் அவளுடைய உலகத்தை அடைந்தின்புறுவர். எந்தையாகிய இறைவனை மயக்கமின்றி வழிபட்டோர் அவனுடைய உலகத்தை எய்தி இன்புறுவர். தலைமைத்தன்மையை அளிக்கும் அந்தச் சிவலோகத்தை அடைந்தவர் மீண்டும் பிறவியில் வரமாட்டார் ஆங்கிருந்தே வீடு பெறுவர்.

(வி - ம்.) எம்மை என்றது முருகக்கடவுள் தம்மைக் குறித்தவாறாம், அம்மை - இறைவி. அவள் - இறைவி. மம்மர் - மயக்கம். வயங்குதல் - விளங்குதல். அவன் - இறைவன். திருமுறார் - மீளார். பதம் - வீடு.

(220)

 அலகை யாதியாச் சிவபுர மிறுதியா வடைவின்முற் றுபுநிற்கும்
 குலவு சித்திக ளெட்டுநற் குணங்களு மிம்முறை கொண்டேறும்
 நிலம்வ னங்கநல் வளிவெளி மனமகங் காரமே விரிபுந்தி
 நலிவி லொண்குண மூலமு முராரித னல்லக விளக்காகும்.

(இ - ள்.) பைசாசவுலகம் முதல் சிவலோகம் இறுதியாகக் கூறப்பட்ட இவற்றை முறையே எய்தும் உயிர்கட்கு அணிமா முதலிய எட்டுச்சித்திகளும் அவற்றோடு கூடிய நற்குணங்களும் இம்முறையிலேயே படிப்படியாக ஏறாநிற்கும். இனி, நிலம் நீர் தீ வளி வெளி மனம் அகங்காரம் விரியுமியல்புடைய புத்தி குறைதலில்லாத ஒள்ளிய குணங்களுக்கு முதலாகிய மாயையும் என்னும் இவ்வொன்பது தத்துவங்களும் திருமாலுடைய நல்ல நெஞ்சகத்துள்ளே நின்று எரியும் விளக்குப் போன்று அவனுடைய அறிவை விளக்காநிற்கும்.

(வி - ம்.) பைசாசருலகினர்க்கு எண்குணமும், இராக்கதர்க்குப் பதினாறு குணமும் இம்முறையே குணங்கள் மிகுமென்க.

(221)

 புந்தி நீங்கிய வெட்டும்வண் கமலத்தோன் புந்தியைத் தெருள்விக்கும்
 இந்த வாறுகீ ழுள்ளவர்க் கொரோவொன்றங் கிகப்புறு மிழிந்தோரும்
 அந்தி வானிறத் தமலன்பூ சனையினா லடைவினி லுயர்ந்தேறி
 முந்து பார்முத லொன்பதும் விளக்குறு முதன்மையுள் ளவராவார்.

(இ - ள்.) முற்கூறிய இவ்வொன்பது தத்துவங்களிற் புத்தி தத்துவம் ஒழிந்த எட்டும் பிரமதேவனுடைய அறிவினை விளக்கா நிற்கும். இம்முறையாலேயே கீழ்க்கீழ் உலகங்களில் உறைவோர்க்கும் ஒவ்வொரு தத்துவம் குறையும் என்று கொள்க. இனிச் செக்கர் வான்