பக்கம் எண் :

504தணிகைப் புராணம்

 பிறனில் விழைதல் பொருள்விழைதல்
           பிறர்தம் பொருட்கே டெணலுயிர்கட்
 கிறுதி யெண்ணன் மனத்தனவா
           மேங்கு மழுகை கோளுரைபொய்
 அறைதல் புறங்கூ றுதல்வாக்கின்
           ஆவ பிறனில் புணர்ச்சியுயிர்
 தெறுதல் பழியூ ணுணல்பிறர்சீர்
           தெவ்வ னான்கும் வடிவினவே.

(இ - ள்.) பிறன்மனைவியை விரும்புதல், பிறர்பொருளை விழைதல், பிறர்பொருட்குக் கேடு நினைத்தல், உயிர்களைக் கொல்லக் கருதுதல் என்னுமிந்த நான்கும் மனத்தால் விளையும் தீவினைகள். ஏங்குதற்குக் காரணமான அழுகையும், கோட்சொல்லுதலும், பொய் கூறலும், புறங்கூறலும் ஆகிய இந்நான்கும் மொழியிற் றோன்றுந் தீவினைகள். பிறன் மனையாளைச் சேர்தல், உயிர்கொல்லுதல், பழிக்கப்பட்ட ஊனை உண்ணுதல், பிறர்பொருளைக் கவர்ந்து கோடல் என்னுமிந் நான்கும் உடலால் செய்யப்படுந் தீவினைகள்.

(வி - ம்.) ஆவ : பலவறிசொல். தெறுதல் - கொல்லுதல், தெவ்வல் - கொள்ளுதல். சீர் ஆகுபெயராய்ப் பொருளைக் குறித்து நின்றது.

(225)

 அளந்த வவைதா மொன்றுபல வாக விரியு மவையெல்லாம்
 கிளந்த வதிபா தகமாதி மூன்றுட் கெழும வடங்கியிடும்
 தளைந்த வதிபா தகமாபா தகமே யுபபா தகமென்ன
 விளங்கு மவையொன் றற்கொன்று வீறு தணிந்த நிலையினவே.

(இ - ள்.) ஈண்டுப் பகுத்தோதிய அத்தீவினைகள் தாமே ஒவ்வொன்றும் பற்பலவாக விரியும். அவ்விரிவெல்லாம் கூறப்பட்ட மிகைத் தீவினை முதலிய மூன்றனுட் பொருந்தி அடங்குவனவாம். பிணிக்கப்பட்ட மிகைத்தீவினையும் பெருந்தீவினையும் இனத்தீவினையும் என்று விளங்காநின்ற அவைகள்தாம் தம்முள் ஒன்றற்கொன்று முறையே கொடுமை குறைந்த தன்மையனவாம்.

(வி - ம்.) அளத்தல் - ஏதுவாற் பகுத்தல். கெழும - பொருந்த. உபபாதகம் - தீவினைகட்கினம். வீறு - வேறொன்றற் கில்லாத சிறப்பு ஈண்டுக் கொடுமைப் பண்பு குறித்து நின்றது.

(226)

 புரையி லிறைக்கு மவன்மொழிக்கும் பொருவு முயர்வு முன்னினரும்
 உரைசெய் தவரு நிந்தையவ ரோடுங் குரவர்க் குரைத்தோறும்
 கரைசெ யிறைவன் வாக்கியபுத் தகமக் கடவு டிரிவியங்கள்
 வரைசெய் குரவன் பொருளிவைவௌ வினரு மதிபா தகரென்பார்.

(இ - ள்.) ஒப்பற்ற இறைவனுக்காதல், அவன் செவியறிவுறுத்த வேதாகம மொழிகட்காதல், உவமையும் உயர்வுங் கருதியவரும்,